இன்று 18.03.2014 சென்னையில் உள்ள ஆசிரியர் மன்ற கட்டிடத்தில் டிட்டோஜாக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து சங்கத்தை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்தகட்ட முடிவுகள் குறித்து விவாதிக்கப் பட்டது.
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1. 06.03.2014 அன்று வேலை நிறுத்தப்போராட்டத்தை வெற்றி அடையச்செய்த
அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது
2. 10% அகவிலைப்படி உயர்வை உடனே அறிவிக்க வலியுறுத்துவது
3. 2014 ஜூன் முதல் வாரத்தில் அடுத்த கட்ட போராட்டங்கள் பற்றி
முடிவெடுப்பது
No comments:
Post a Comment