Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 19 March 2014

பத்தாம் வகுப்புத் தேர்வு: தத்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்

சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) கீழ் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை (மார்ச் 20) முதல் தங்களுக்கான ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.
இவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு மார்ச் 20, 21 தேதிகளில் நடைபெற உள்ளது. சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட், அறிவியல் செய்முறை பதிவேடு ஆகியவற்றுடன் செய்முறைத் தேர்வுக்கு வர வேண்டும். ஏற்கெனவே செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளிகளிலேயே இவர்கள் செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment