Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 30 April 2014

தயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள்: மே 15ம் தேதிக்கு பிறகு வினியோகம்

தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான இலவச புத்தகங்களை பொறுத்தவரை உயர் வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி முடிந்து, தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது. திருவான்மியூர் கிடங்கில் இருந்து அனைத்து வட்டார அலுவலகங்களுக்கும், பாடப்புத்தகங்களை பிரித்து, லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த மாவட்ட குடோன்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அச்சகங்களில் இருந்து நேரடியாக அனுப்பும் பணியும் தொடங்கியுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பிளஸ் 2 பாடப்புத்தகங்களை, பிளஸ் 1 ரிசல்ட் வெளியிட்ட பிறகு தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்குவார்கள்.
இதைதொடர்ந்து, 22 வட்டார அலுவலகங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆகிய இடங்களில் புத்தகங்கள் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. விற்பனைக்காக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் சுமார் 16 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இலவச பாடநூல் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக 64 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்நிலையில், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான முப்பருவ முறை புத்தகங்கள் மே 15ம் தேதிக்குள் அனைத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு தொகுதி புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு இந்த ஆண்டு முப்பருவ முறை இல்லை என்பதால் கடந்த ஆண்டு பயன்பாட்டில் இருந்த அதே புத்தகமே இந்த ஆண்டும் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன. அதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கிறது. 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு தலா ஒரு புத்தகம், 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு தலா 2 புத்தகங்கள் என அச்சிடப்பட்டுள்ளன. ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்கள் கையிலும் புதிய புத்தகங்கள் இருக்கும்.
பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களை, 9ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான பிறகு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குவார்கள். பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் சுமார் 75 லட்சம் அச்சிடப்படுகின்றன. பத்தாம் வகுப்பு புத்தகங்கள் வினியோகம் செய்த பிறகு படிப்படியாக மற்ற வகுப்பு புத்தகங்கள் மே மாத இறுதிக்குள் வழங்கப்படும். ஆனால் மே 15ம் தேதிக்குள் அனைத்து வகுப்பு புத்தகங்களும் வழங்கப்படும் என்று பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment