Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 27 April 2014

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தது


பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9ம் தேதி முடிந்தது. இதையடுத்து ஏப்ரல் 10ம் தேதியே விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கின. மொத்தம் 70க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தப்பட்டது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். ஏப்ரல் 22ம் தேதிக்குள் அனைத்து விடைத்தாள்களையும் திருத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை திட்டமிட்டு இருந்தது. 

ஆனால் இடையில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறுக்கிட்டதால் நேற்றுமுன்தினம்வரை திருத்தும் பணிகள் தொடர்ந்தன. விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 விடைத்தாள்கள் திருத்த வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment