Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 27 April 2014

பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு "வழிகாட்டி' நிகழ்ச்சி


பொதுத்தேர்வை முடித்துள்ள, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மாவட்டந்தோறும், "வழிகாட்டி' நிகழ்ச்சியை நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 9ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, மே 23ம் தேதியும் வெளியாகிறது.

பத்தாம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில், எந்தெந்த, "குரூப்'பை தேர்வு செய்யலாம்; எந்த, "குரூப்'பை தேர்வு செய்தால், என்னென்ன உயர்கல்வி படிக்க முடியும் என்பது குறித்து, "வழிகாட்டி' நிகழ்ச்சியில் விளக்கிக் கூற, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து விளக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி, தேர்வு முடிவு வெளியானதற்குப் பின், மாவட்டந்தோறும் நடக்கும் என, கல்வித்துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது.

No comments:

Post a Comment