Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 15 June 2014

பள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடி வைக்க நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


பள்ளிகளில் உள்ள கிணறுகளை மூடிவைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் எல்லாவகையான மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். என்று பள்ளி கல்வி இயக்குநர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரின் உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது மாவட்டங்களில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மழையினால் பள்ளி மாணவ மாணவியருக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் மாணவ மாணவியர், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

பள்ளி வளாகத்தில் நீர்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள் இருந்தால் அவற்றை மூடி வைக்க வேண்டும். பள்ளிகளுக்கு வெளியே உள்ள நீர்நிலைகளுக்கு மாணவ மாணவியர் பாதுகாப்பு இன்றி செல்லக்கூடாது. பள்ளி வளாகத்தில் உள்ள மின்சாதனங்களை மாணவர்களை கொண்டு இயக்குவதை தவிர்க்க வேண்டும். பள்ளி நேரம் முடிந்த பின்னர் வகுப்பறையை விட்டு அனைத்து மாணவர்களும் சென்றுவிட்டதை உறுதி செய்த பின்னர் வகுப்பறை மற்றும் பள்ளியை பூட்டிவிட்டு செல்ல வேண்டும். பள்ளிகளில் முதலுதவி செய்யும் வகையில் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள அனைத்து மருத்துவ பொருட்கள் அடங்கிய முதலுதவி பெட்டி இருத்தல் வேண்டும். தீயணைப்பு சாதனங்கள் பள்ளியில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment