Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 15 June 2014

ஆங்கில வழிக் கல்விக்கு ஆசிரியர் இன்றி அவதி


மேலுார் அரசு பெண்கள் பள்ளியில், ஆங்கில வழிக் கல்விக்கு, போதிய ஆசிரியர்கள் இன்றி, மாணவியர் அவதியுறுகின்றனர்.
இப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் இரண்டாயிரத்து ஐநுாறு மாணவிகள், 6 முதல் 12 வரை ஆங்கில வழிக் கல்வியில் 600 மாணவிகள் படிக்கின்றனர். மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை. குறிப்பாக ஆங்கில வழிக் கல்வி பிரிவில் போதிய ஆசிரியர்கள் இல்லை. தமிழ் வழிக் கல்வி ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்படுகிறது. சில நாட்களுக்கு முன் ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி போதிய ஆசிரியர்களை நியமிக்கும்படி தலைமையாசிரியரிடம் தெரிவித்தனர்.
மாணவியர் கூறியதாவது: மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கிடைக்கும் என நம்பி இப்பள்ளியில் சேர்ந்தோம். இங்கு போதிய ஆசிரியர்கள் இல்லை, என்றனர்.கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ''தற்போது மாணவியர் சேர்க்கை நடப்பதால், பிறகு மாணவியர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,'' என்றார்.

No comments:

Post a Comment