Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 15 June 2014

சான்றிதழ் அளிப்பதில் தாமதம்; அலைகழிக்கப்படும் பெற்றோர்


பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் வழங்க தாமதப்படுத்துவதால் பெற்றோர்,மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
கல்வியாண்டின் துவக்கத்தில், பல்வேறு காரணங்களால், ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை மாற்ற பெற்றோர் விரும்புகின்றனர். ஏற்கனவே, படித்த பள்ளியில் மாற்று சான்றிதழ் கேட்கும்போது, அங்கிருப்பவர்கள் காலதாமதப்படுத்துவதால் உரிய காலத்திற்குள் பிறபள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.சில பள்ளிகளில் மட்டுமே மறுப்பு தெரிவிக்காமல் மாற்று சான்றிதழ் வழங்குகின்றனர். ஒருசில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால், பிரச்னை ஏற்படும் என்பதற்காக, ஏதாவது ஒரு காரணத்தை கூறி பெற்றோர்களை அலைகழிக்கின்றனர்.மாற்று சான்றிதழ்களை குறிப்பிட்ட தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு சில பள்ளிகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றனர். அவர்கள், குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்று சான்றிதழை வழங்க முடியாத பெற்றோருக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. கல்வித்துறை அதிகாரிகள் ஆய்விற்கு வரும்போது, மாற்று சான்றிதழ் தராதவர்களை வகுப்பில் அனுமதித்திருந்தால் சிக்கல் எழும் என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துவதால் பெற்றோர்களுக்கு இக்கட்டான நிலை ஏற்படுகிறது. பள்ளிகளில் மாற்று சான்றிதழுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதம் இல்லாமல் வழங்க பள்ளி நிர்வாகத்தினருக்கு, கல்வித் துறையினர் வலியுறுத்த வேண்டும்

No comments:

Post a Comment