தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தொடர் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 6–வது ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று 3–வது நாளாக சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 2300 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.
போராட்டம் குறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் என். ரெங்கராஜன் கூறியதாவது:–
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 3 நாட்களாக தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அனால் அரசு கண்டு கொள்ளவில்லை. எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கடும் வெயிலை பொருட்படுத்தாமல் ஆசிரியைகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment