வாஷிங்டன்: பகலில் ஒரு மணி நேரம் வரை தூங்கினால், மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில், 40 ஆரம்பப் பள்ளி மாணவர்களிடம் நடத்திய சோதனையில், பகலில், ஒரு மணி நேரம் தூங்கும் மாணவர்களின் நினைவாற்றல் மற்றும் கற்கும் திறன் அதிகரித்ததை, மாசாசூசெட்ஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், கண்டுபிடித்துள்ளனர்.
பள்ளிக் குழந்தைகளின் வாழ்வில், துவக்கத்திலேயே, நினைவாற்றலை அதிகரிப்பது அவசியம் என்றும், அதற்கு குழந்தைகளை மதிய நேரத்தில், சிறிது நேரம் தூங்கவிட்டால் , படிப்பில் சுட்டியாக விளங்குவர் என்றும், விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment