Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 22 March 2014

10ம் வகுப்பு தேர்வு : ஹால்டிக்கெட் வினியோகம் தொடங்கியது

பத்தாம் வகுப்பு தேர்வுகள் 26ம் தேதி தொடங்குவதை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு நேற்று ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.  அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட்டுகள் தேர்வுத்துறையில் இருந்து நேற்று பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்றே பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஹால்டிக்கெட்டுகளை வினியோகம் செய்தனர். பள்ளிக்கு வராத மாணவர்கள் மற்றும் விடுபட்டவர்களுக்கு தேர்வு தொடங்கும் நாளிலும் ஹால்டிக்கெட் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கும். மதியம் 12 மணிக்கு முடியும்.

No comments:

Post a Comment