Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 1 March 2014

தமிழக அரசின் 20 துறைகளில் 52 பிரிவுகளில் பணியாற்றும் அரசு ஊழியர் சம்பளத்தை சரியாக நிர்ணயம் செய்யவேண்டும்: ஐகோர்ட் உத்தரவு


அரசு ஊழியர்களின் சம்பள குறைபாடுகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் புதிய கமிட்டி ஒன்றை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊரூ.யர் தியாகராஜன் என்பவர் உட்பட நூறு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:அரசு ஊரூ.யர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யும் போது பல்வேறு குறைபாடுகள் உள்ளது. 6வது ஊதிய கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் சில குறைபாடுகள் உள்ளதால் அதை ஆய்வு செய்ய அரசு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி சிலருக்கு அதிகமாக சம்பளம் நிர்ணயம் செய்து விட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது.

எனவே கமிட்டியை ரத்து செய்யவேண்டும். இதுதொடர்பாக எடுத்த முடிவுகளை ரத்து செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் புதிய கமிட்டியை அமைக்க வேண்டும்.  இவ்வாறு அவர்  வழக்கில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் பால்வசந்தகுமார், தேவதாஸ் ஆகியோர் விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பு: அரசு ஊரூ.யர்களின் சம்பளம் நிர்ணய குறைபாடுகளை ஆய்வுசெய்ய முன்னாள் நீதிபதி வெங்கடாசல மூர்த்தி தலைமையில் ஒரு கமிட்டியை அரசு 3 வாரத்தில் நியமிக்க வேண்டும். இதில் முதன்மை செயலாளர் அந்தஸ்த்தில் உள்ள 2 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெற வேண்டும். 

இந்த கமிட்டியில் அரசு ஊரூ.யர்கள் தங்கள் சம்பள நிர்ணய குறைபாடுகளை தெரிவிக்கவேண்டும். அந்த குழு தீர ஆய்வு செய்து உரிய முடிவு எடுத்து தனது அறிக்கையை அரசிடம் சமர்பிக்கவேண்டும். முன்னாள் நீதிபதிக்கு மாதம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் தரவேண்டும். இந்த கமிட்டி தமிழக அரசின் 20 துறைகளில் 52 பிரிவுகளில் பணியாற்றும் ஊரூ.யர்களின் கருத்து கேட்டு அவர்களின் சம்பளத்தை சரியாக நிர்ணயம் செய்யவேண்டும் இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment