Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 1 March 2014

ஆசிரியை எச்சில் துப்பியதால் தீக்குளித்த மாணவி: குழந்தைகள் நல ஆணையர் விசாரணை

திருவொற்றியூரை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் பவித்ரா (14). அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 25ம் தேதி அன்று வகுப்பு ஆசிரியை சாப்பிட்டுக் கொண்டிருந்த  பவித்ரா மீது துப்பினார்.    மாணவிகள் மத்தியில் ஆசிரியை எச்சில் துப்பிய தால் மனம் உடைந்த பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத போது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண் டார். பவித்ரா வலி தாங்க முடியாமல் அலறிய சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து பவித்ராவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீக்காய சிகிச்சைதுறை தலைமை மருத்துவர் ஜெகன்மோகன் தலைமையில் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.  இந்நிலையில் தமிழக குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரசுவதி நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பவித்திராவிடம் நேரில் வந்து பள்ளியில் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். 

No comments:

Post a Comment