Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 26 April 2014

"ஸ்மார்ட் போனில்' பிளஸ் 2 தேர்வு முடிவு பார்க்கலாம் : இணையதள முகவரிகள் வெளியீடு

வரும், மே 9ல் வெளியாகும், பிளஸ் 2 தேர்வு முடிவை, நான்கு இணையதளங்களில், தேர்வுத்துறை வெளியிடுகிறது; முகவரிகளை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று வெளியிட்டார்.
அதன் விவரம்: மாணவர்கள், மே 9ம் தேதி காலை 10:00 மணி முதல், www.tnresults.nic.inwww.dge2.tn.nic.inwww.dge3.tn.nic.inஆகிய மூன்று இணையதளங்களில், தேர்வு முடிவை பார்க்கலாம். நான்காவதாக, www.dge1.tn.nic.in, என்ற இணையத்திலும், "ஸ்மார்ட் போன்' மூலம், முடிவைப் பார்க்கலாம்.
இணையதளத்தில் பார்க்க, தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். தேர்வு முடிவை, மதிப்பெண்களுடன், 0928223 2585 என்ற மொபைல் எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி பெறலாம். இதற்கு, TNBOARD/RN/DOB என்பதற்கு ஏற்ப, TNBOARD/ மாணவரின் பதிவு எண் (RN)/ பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை பதிவு செய்து, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கு முன், எஸ்.எம்.எஸ்., அனுப்பக் கூடாது. மாவட்டங்களில் உள்ள, தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி தேர்வு முடிவை அறியலாம். மாணவர்கள், தங்களது பள்ளிகளுக்கு, நேரில் சென்றும் தேர்வு முடிவை அறியலாம்.

No comments:

Post a Comment