தமிழகத்தில் முதல் முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதை உறுதி செய்து கொள்ள ஒப்புகைச் சீட்டு அச்சிடும் புதிய திட்டத்தை செயல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி எம்எல்ஏ பெருமாள், கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஒரு வாக்காளர் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாரோ அந்த வேட்பாளருக்கு நேரான வரிசை எண் வாக்களித்தவுடன் ஓட்டு இயந்திரத்தில் ஒளிரும். வாக்குப்பதிவு இயந்திரத்துடன் தனியாக இணைக்கப்பட்டுள்ள பிரின்டரில் அதற்கான சிறிய ஒப்புகைச்சீட்டு வெளியில் வரும். அதில் குறிப்பிட்டிருக்கும் வரிசை எண்ணை வைத்து சரியாக வாக்களித்துள்ளோமா என்பதை ஒவ்வொரு வாக்காளரும் தெரிந்து கொள்ளமுடியும். அந்த சீட்டு பிரின்டர் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்குள்ளேயே விழுந்துவிடும். அதை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது.
No comments:
Post a Comment