Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 23 October 2013

அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு குழந்தைகளுக்கு சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்தார்


லால்குடி அருகே ஆங்கரை ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் குழந்தைகளுக்கு சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்தார்.
அங்கன்வாடியில் ஆய்வு
திருச்சி மாவட்டம் லால்குடியில் திருச்சி-சிதம்பரம் சாலையில் கோர்ட் அமையவுள்ள இடத்தை கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, ஆங்கரை ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், சமையலறையை பார்வையிட்டதுடன் குழந்தைகளுக்கு சமைத்த உணவு, சுண்டல் ஆகியவற்றை சாப்பிட்டு பார்த்தார்.மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், எடைபார்க்கும் இயந்திரம், குழந்தைகளின் எடை, ஆவணங்கள், மளிகை பொருட்கள் போன்றவற்றை சோதனை செய்தார். பின்னர் அங்கன்வாடி அமைப்பாளர், மேற்பார்வையாளருக்கு போதுமான ஆலோசனைகளை வழங்கினார்.
கோரிக்கை
அதனை தொடர்ந்து லால்குடி பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தபோது அங்கிருந்த பொதுமக்கள் கலெக்டரிடம், பல்வேறு புகார்களை தெரிவித்தனர். பயணிகள் நிழற்குடையை இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும், பஸ் நடைமேடைகள் கடைகளாகவும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. மழை பெய்தால் பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.
பஸ் நிலையத்தில் கார் நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அருகிலுள்ள கழிப்பிடத்திற்கு பெண்கள், மாணவிகள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. திருச்சி-சிதம்பரம் சாலையில் மீன் மார்கெட் அமைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாக பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
அதனை கேட்ட கலெக்டர், பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ் நிலையத்தை மேம்படுத்தவும், மீன் மார்க்கெட் சம்மந்தமாக, சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது தாசில்தார் ஸ்டெல்லா ஞானமணி பிரமிளா, வட்ட வழங்கல் அலுவலர் கண்ணாமணி, வருவாய் ஆய்வாளர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment