பள்ளி பாடத்திட்டத்தில் நல்லொழுக்க கல்வியை சேர்க்க வேண்டும் என்று கத்தோலிக்க பள்ளிகளின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சேலம் ஏற்காட்டில் உள்ள மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் கடந்த 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை அகில இந்திய கத்தோலிக்க பள்ளிகளின் 46வது மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 462 பள்ளி முதல்வர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டை ஓய்வு பெற்ற சென்னை போலீஸ் அதிகாரி டாக்டர் எஸ்.பி. இளங்கோவன் தொடங்கி வைத்தார்.
இதில் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு 16ம் தேதி அன்று கூடுதல் டி.ஜி.பி. வி.பிலீப் தலைமை தாங்கினார். மாநாட்டின் நிறைவு நாளில், ''எல்லா கல்வி நிலையங்களிலும் கட்டாய நல்லொழுக்க கல்வி பாடம் புகுத்தப்பட வேண்டும். நாட்டில் உள்ள கற்பழிப்பு, கொலை, பேராசை இவற்றின் மீது மாணவர்களுக்கு வெறுப்பையும் நேர்மையான நல்வாழ்க்கையின் மீது அன்பையும் கல்வி உருவாக்க வேண்டும்.
சுற்றுப்புற தூய்மை மற்றும் பசுமை மீது ஈடுபாட்டையும் இவற்றை பாதுகாக்க பயிற்சியையும் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஏற்காடு மான்போர்ட் பள்ளி முதல்வர் வர்கீஸ், பாதிரியார்கள் புதுடெல்லி கே.ஜே.அந்தோணி, சென்னை எஸ்.அருளப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment