மாணவர்கள் எளிதில் பாடத்தை புரிந்து கொள்வதற்காக இணையதளம் மூலம் கல்வி கற்கும் முறை சென்னையில் உள்ள அரசு பள்ளியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் எந்த பாடத்தையும், எந்த பொருளையும் தானாகவே விளக்கம் பெறலாம். இந்த திட்டம் இந்தியாவில் முதல் முதலாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேகவழி கற்றல்
தமிழக தொலை நோக்கு -2013 ஆவணத்தில் உள்ள இலக்குகளில் ஒன்றாக அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க இந்திய நாட்டிலேயே மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை தமிழகம் ஏற்படுத்தி தரும் என்பதற்கு இணங்க 4,340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் வழி கல்வியை அறிமுகப்படுத்த முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டு அது பள்ளிக்கல்வித்துறையால் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை ஒரு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு மேக வழி கற்றல் என்னும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்த புரிதல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறை
அதன்படி இந்தியாவில் முதன் முதலாக சென்னை எம்.ஜி.ஆர்.நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் மேக வழி கல்விமுறையை தொடங்கி வைத்தார்.
கற்றல் முறைக்கு தேவையான மடிக்கணினிகள், கையடக்க கணினி ஆகியவற்றை சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.
கேகவழி கல்வி முறை இந்தியாவில் முதல் முன்னோடியாக சென்னை எம்.ஜி.ஆர்.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஒரு தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
தளவாடபொருட்கள்
அந்த நிறுவனம் மற்றும் டெல் நிறுவனம் இணைந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 11 மடிக்கணினிகள், 13 கை அடக்க கணினிகள் , புரொஜக்டர் , பிரிண்டர் , வை-பை தொடர்பு மற்றும் இந்த கற்றல் முறைக்கு தேவ¬யான தளவாடச்சாமான்கள் ஆகியவற்றிற்கு தேவையானவற்றை வழங்கி உள்ளன.
இந்த புதிய முறையை கற்பிப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உதவியாளர் ஒருவரையும் நியமித்துள்ளது.
இந்த மேகவழி கல்வி முறை இணைய ஆய்வகம் வாயிலாக மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் அறிவு பகிர்ந்து கொள்ளும் முறை ஆகியவற்றை தாங்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்தே மற்ற பள்ளிகளுடன் கல்வியை பகிர்ந்து கொள்ள முடியும்.
இந்த முறையில் ஒரு வகுப்பறையில் வட்டமாக நாற்காலிகளில் மாணவ-மாணவிகள் உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் லேப்டாப் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வை-பை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பெரிய திரையில் புரொஜக்டர் மூலம் பாடம் கற்பிக்கப்படுகிறது. எல்.கே.ஜி.முதல் பிளஸ்-2 வரை உள்ள ஆங்கிலம், அறிவியல், வரலாறு, கணிதம் உள்பட அனைத்துப்பாடங்களும் அதற்கான விளக்கங்களும் படங்களுடன் சி.டி.வடிவில் உள்ளன.
எது தேவையோ அதை அந்த தொழில்நுட்ப உதவியாளரிடம் சொன்னால் அதை திரையில் போடுகிறார். உதாரணமாக இருதயம் என்றால் அதை அப்படியே படமாக காண்பிக்கப்படுகிறது. அதுபோல விலங்கு செல் பற்றிய விளக்கம் தேவை என்றால் அது அப்படியே காண்பிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு பாகமும் விளக்குவது ஒரு ஆசிரியை கற்பிப்பது போல உள்ளது.
எந்த மாணவருக்கு இந்த விளக்கம் தேவையோ அந்த மாணவர் இதை பள்ளிக்கல்வித்துறையுடன் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு ஒரு ரகசிய கோடு கொடுக்கப்படும்.
இதைக் கொண்டு மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே எந்த மாணவரிடமும் தொடர்பு கொண்டு படிக்கலாம். தேவையான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.
இந்த தொடக்க நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா, பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment