Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday 20 October 2013

மொபைல்போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்கும் உளவு கருவி: விவசாயி மகன் கண்டுபிடிப்பு

சுற்றுப் பகுதிகளில், மொபைல் போன் பேச்சுகளை கேட்கும், உளவுக் கருவியை, ஒரு விவசாயியின் மகன் தயாரித்து உள்ளார்.உத்தரபிரதேச மாநிலம், பாஜ்னா பகுதியில் உள்ள, சதிக்பூரில் வசிக்கும் விவசாயி, பிரம்மஜித் சிங். இவரது மகன், அமித் சவுத்ரி, அப்பகுதியில் உள்ள, பாபா சாகேப் அம்பேத்கர் பாலிடெக்னிக்கில், மெக்கானிக்கல் பிரிவில் படித்து வருகிறார். விஞ்ஞானத்தின் வளர்ச்சியை பயன்படுத்தி, ஏதாவது ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம், சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கு ஏற்பட்டுள்ளது.படிப்பு நேரம் தவிர, ஒரு மொபைல் போன் பழுது பார்க்கும் கடையை அமித் நடத்தி வந்தார். அப்போது, குறிப்பிட்ட தூரத்தில், மொபைல் போன் பேச்சுகளைக் கேட்கும் கருவி தயாரிக்கும் திட்டத்தை உருவாக்கினார். இதையடுத்து, தன் மொபைல் போன் கடையை மூடிவிட்டு, கருவியைத் தயாரிப்பதில் ஈடுபட்டார். மூன்று பிரிவுகளைக் கொண்ட இக்கருவியில், சில கருவிகளை இணைத்தார்.ஒட்டுக் கேட்க வேண்டிய பகுதியில், ரகசிய கருவிகளை பல்பில் இணைத்து தொங்க விடுவதால், மக்களுக்கு சந்தேகம் வராது என்பதை கண்டறிந்தார். பின், ஐ.சி., மற்றும் லேப்டாப்பை, 100 மீட்டர் தொலைவில், மறைவான இடத்தில் வைத்து, ஹெட்செட்டை இயக்கினால், மைக் வைக்கப்பட்டுள்ள பகுதியில், பேசுவது மற்றும் மொபைல் போனில் பேசுவதை கேட்க முடியும். இந்த கருவியைத் தயாரிக்க, 5,000 ரூபாய் செலவானதாகவும், ஒரு ஆண்டிற்குள் தயாரித்து முடித்ததாகவும், அமித் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment