Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 22 October 2013

ஆசிரியர்களே சிடிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்க தயாராகி விட்டீர்களா?

சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற சிடிஇடி தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் சென்ட்ரல் டீச்சிங் எஜூகேஷன் டெஸ்ட் (சிடிஇடி) அல்லது டீச்சர்ஸ் எஜூகேஷன் டெஸ்ட் (டிஇடி) ஆகிய தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே ஆசிரியராக பணியாற்ற முடியும்.
இதில் பிரைமரி, எலிமெண்டரி என்ற இரண்டு பிரிவு உள்ளது. பிரைமரி - 1 முதல் 5ம் வகுப்பு வரை நடத்தும் ஆசிரியர்கள் தேர்வெழுத பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
எலிமெண்டரி - 6 முதல் 8ம் வகுப்பு வரை நடத்தும் ஆசிரியர்கள் தேர்வெழுத டிஇஇ.,க்கு நிகரான படிப்பு முடித்திருகக வேண்டும். பி.இஎல்.எட்., படிப்பின் இறுதியாண்டு தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர், பிரிண்ட் அவுட் எடுத்து சிபிஎஸ்இ அலுவலத்திற்கு அனுப்ப வேண்டும்.
முழு தகவல்களை அறிய சிபிஎஸ்இ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment