Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 1 April 2014

சுறுசுறுப்பில் கல்வி துறை –பிளஸ் 1 வகுப்புகளை விரைவாக தொடங்க நடவடிக்கை

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவை கடந்த ஆண்டை போல் இல்லாமல் இந்தாண்டு சீக்கிரமாக வெளியிட தேர்வு துறை விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பிளஸ்டூ தேர்வுகள் முடிந்து தற்போது விடைத்தாள்கள் வேகமாக திருத்தப்பட்டு வருகின்றன. வரும் 19 ஆம் தேதிக்குள் இந்த பணியை முடிக்க தேர்வு துறை முழு வீ்ச்சில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. தமிழ்தாள் மட்டும் முடிந்துள்ளது. அனைத்து தேர்வுகளும் வரும் 9 ஆம் தேதிக்குள் முடிகிறது. இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு விடைத்தாளகளும் வெகு வேகமாக திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பு செல்லும் மாணவர்கள் நீண்ட நாள் கோடை விடுமுறையில் இருப்பர். அதனை இந்தாண்டு குறைத்து விரைவில் பள்ளியில் சேர்க்க சேர்க்கை நடத்தி அவர்களுக்கு வகுப்புகளை தொடங்க கல்வி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் ஜூன் மாதம் 16ம் தேதி பிளஸ் 1 வகுப்புகளை தொடங்க தேர்வு துறை முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை விட இந்தாண்டு முன்னதாகவே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே 31ம் தேதி 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியிடப்பட்டு ஜூன் 24ம் தேதி பிளஸ் 1 வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டு ஒரு வாரம் முன்னதாகவே வகுப்புகள் தொடங்கப்படும். மற்ற வகுப்புகளுக்கு கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 2 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. வெயில் காரணமாக தனியார் பள்ளிகள் சில ஜூன் மாதம் 4 ஆம் தேதி திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கோடை வெயில் காரணமாக ஜூன் 10 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment