Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 8 April 2014

100/100 குறையும் வாய்ப்பு 10ம் வகுப்பு அறிவியல் கேள்வித்தாளில் குழப்பம்


பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாளில், குழப்பமான கேள்விகள் இடம் பெற்றுள்ளதால் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவ மாணவியர் சென்டம் எடுப்பது குறையும். பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நடந்தது. அதில் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளில் குழப்பமான கேள்விகள் இடம் பெற்றுள்ளதாக மாணவ மாணவியர் தெரிவித்தனர். கேள்வி எண் 41ல் ஆடியில் உருவாகும் உருவப்பெருக்கம் 1/3 எனில் அந்த ஆடியின் வகை.... என்ற கேள்விக்குரிய விடைகளாக குழி, குவி, சமதளம் என்று கொடுக்கப்பட்டு இருந்தது. 

ஆனால் பாடப்புத்தகத்தில் பக்கம் 299ல் கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக் காட்டு கணக்கு எண் 17.3ன்படியும், பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சிறப்பு வழிகாட்டியிலும் குழி ஆடி என்றே விடை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் குவியாடி என்ற பதிலும் பொருத்தமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த விடை சரியானது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அதேபோல கேள்வி எண் 29ல் போக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்தும் எரிபொருள்கள் யாவை? என்ற கேள்விக்கு ஆங்கிலத்தில் லிகுட் பயோ ப்யூல்ஸ் என்று உள்ளது. 

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த விடையை குறிப்பிடும் போது திரவ உயிரி எரிபொருள் என்று கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி கேள்வித்தாளில் கொடுக்கவில்லை. ஆங்கிலத்தில் உள்ள கேள்வியின் படி இதற்கான விடை  உயிரி ஈதர், உயிரி ஆல்கஹால், உயிரி பெட்ரோல் எனபவை பதிலாக வருகிறது.  இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இதுபோல் குழப்பமாக கேள்விகள் அமைந்ததால் சரியான விடையை தேர்வு செய்து எழுதுவதிலும், புத்தகத்தில் ஒன்றும் கேள்வியில் ஒன்றாக விடை கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். 

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறுகையில், பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு கேள்வித்தாளில் புளூ பிரிண்ட்படி குறு வினாக்கள்  பகுதியில் காரணம் கூறுதலும், உறுதிப்படுத்துதலும் வினா கேட்கப்படவில்லை.  அதுமட்டும் அல்லாமல் ஒரு சில வினாக்களுக்கு  இரு வேறு பதில்கள் இருப்பதால் கிராமப்புற மாணவர்கள் நூறு சதவீத மதிப்பெண்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற குழப்பம் ஏற்படும் காலங்களில் தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ விடைகளை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment