Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 4 April 2014

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் தொலைநெறி கல்வி தேர்வு மே 19-ல் தொடக்கம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலைநெறி கல்விக்கான தேர்வுகள் மே மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான தேர்வு விண்ணப்பம் கோவில்பட்டி கல்வி மையத்தில் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து கோவில்பட்டி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் சேகர் விடுத்துள்ள அறிக்கை:    தொலைநெறி கல்விக்கான தேர்வுகள் மே மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 10-ம் தேதி, தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 18.
2011, 2012, 2013-ல் சேர்ந்த இளங்கலை மாணவர்கள் முறையே மூன்றாம், இரண்டாம், முதலாம் ஆண்டு தேர்வுக்கும், கல்வியாண்டு 2012 - 2013-ல் சேர்ந்தவர்கள் 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
2012 மற்றும் 2013-ம் ஆண்டிற்கு முன்பு சேர்ந்தவர்கள் தேர்வில் தவறிய அல்லது விடுபட்ட தாள்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பூர்த்தி செய்திட 2 புகைப்படம் மற்றும் அடையாள அட்டையுடன் கோவில்பட்டி கல்வி மையத்தை அணுகவும்.
மேலும், 01-01-2014-ம் ஆண்டு முதல் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என தனது அறிக்கையில் கூறியுள்ளார் அவர்.

No comments:

Post a Comment