Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 12 April 2014

ஊட்டியில் 1–ம் வகுப்பு படித்த மாணவியை துன்புறுத்திய ஆசிரியைகள் கைது

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக செந்தில்குமார் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் காவியா ஊட்டியில் உள்ள தனியார் ஆங்-கில பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 மாதமாக தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியைகள் சுகந்தி, மற்றொரு சுகந்தி ஆகிய 2 பேர் சிறுமி காவியாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பள்ளி இறுதி நாள் என்பதால் சிறுமி காவியா பள்ளி மாற்றுசான்றிதழை பெற்றுக்கொண்டாள். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரின் அத்தை மரகதம்மாள் தனது பேத்தி காவியாவை ஆசிரியைகள் தொந்தரவு செய்து அடித்ததாக ஊட்டி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தனியார் பள்ளி ஆசிரியைகள் சுகந்தி, மற்றொரு சுகந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த ஆசிரியைகளின் உறவினர்கள், சக ஆசிரியர்கள் ஆகியோர் திரண்டு வந்து ஊட்டி நகர மேற்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் ஆசிரியைகள் கைது செய்து வைக்கப்பட்டு இருந்த போலீஸ் வாகனத்தை மறித்தனர். இதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்களை எச்சரித்து போலீ சார் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஊட்டி நகர போலீஸ் துணை சூப்-பிரண்டு அனிதா கூறுகையில், சிறுமி காவியாவை ஆசிரியைகள் தொந்தரவு கொடுத்து அடித்ததாக வந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியைகள் 2 பேரை-யும் கைது செய்து உள்ளதாக தெரி-வித்தார். இதன்பின்னர் அவர்கள் இருவரும் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment