Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 11 April 2014

விடைத்தாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வழங்க வேண்டும்: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை


தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம், மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் வீரசத்தியராமசாமி, மாவட்ட பொருளாளர் சரவணகுமரன் உட்பட பலர் பங்கேற்றனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு, தேனி மேரி மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மதிப்பீட்டு மையத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்டது. இதே போல், சின்னமனூர் காயத்ரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மதிப்பீட்டு மையத்தில், உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்டது.
விடைத்தாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வழங்க வேண்டும். உயிரியல், விலங்கியல் பாடங்களுக்கு காலை 10 விடைத்தாள்களும், மாலை 10 விடைத்தாள்களும் திருத்த வழங்க வேண்டும். மற்ற பாடங்களுக்கு, காலை 8 விடைத்தாள்களும், மாலை 8 விடைத்தாள்களும் வழங்க வேண்டும். அனைத்து பாடங்களுக்கும் அகமதிப்பீடு வழங்க வேண்டும்.
கணிப்பொறி பாடத்திற்கு உள்ளது போல், அனைத்து பாடங்களுக்கும் 75 ஒரு மதிப்பெண் வினா வழங்கி, ஒளியிழை மதிப்பீடு கணிப்பான் அட்டை வழங்க வேண்டும். உயிர் தாவரவியல், உயிர் விலங்கியல் பாடங்களுக்கு தனித்தனி தேர்வு நடத்த, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment