Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 12 April 2014

22–ந் தேதி கடைசி நாளில் தேர்தல் பிரசார நேரம் 1 மணி நேரம் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிக்கும், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் வருகிற 24–ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தலில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆலந்தூர் சட்ட மன்ற தொகுதியில் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் உள்ளதால் வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

வருகிற 22–ந் தேதியுடன் பிரசாரம் ஓய்கிறது. வழக்கமாக பிரசாரம் நிறைவு நாளில் மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறும். ஆனால், இந்த முறை 22–ந் தேதி மாலை 6 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமார் கூறுகையில்,
‘‘ஓட்டுபதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரசாரம் நிறைவு பெற வேண்டும் என்ற விதியின்படி மாலை 6 மணி வரை பிரசாரம் செய்யலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment