Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 25 April 2014

இ-கழிவுகளை அகற்றும் பணியில் 4.5லட்சம் குழந்தைகள்


நாடு முழுதும்இ-கழிவுகளை அகற்றும் பணியி்ல் 4.5 லட்சம் குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. 
உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட புவிதினத்தை முன்னிட்டு அசோசெம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அசோசெம்அமைப்பின் செயலாளர் டி.எஸ் ராவத் கூறியதாவது: நாடு முழுவதும் இ-கழிவு எனப்படும் எலக்ட்ரானிக்கழிவு பொருட்களை அழிக்கும் பணியில் 4.5லட்சம் இந்திய குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர்.சுமார்10-14வயதுடைய குழந்தைகள் இத் தொழிலில் ஈடுபட்டு்ள்ளனர். 
நாடு முழுவதும் ஆண்டு ஒன்றிற்கு 15 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு இ-கழிவுகள் உருவாக்கப் படுகி்ன்றன. நாட்டில் மிக அதிக அளவாக மும்பையில் 96 ஆயிரம் மெட்ரிக்டன் அளவிற்கு இ-கழிவுகள் உருவாக்கப்பட்டு முதலிடத்தை பிடித்துள்ளது.இதற்கு அடுத்தபடியாக டில்லி, பெங்களூரு சென்னை, கோல்கட்டா, அகமதாபாத், ஐதராபாத், புனே போன்ற நகரங்கள் இடம் பெறுகி்னறன. 
இ-கழிவுகளில் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட பொருட்கள் 68 சதவீதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து தொலை தொடர்பு துறை 12 சதவீதம் எலக்ட்ரி்கல்துறை 8 சதவீதம், மருத்துவத்துறை 7, வீட்டு உபயோகப்பொருட்கள் 5 சதவீத அளவிற்கு இடம் பிடித்துள்ளது. மேலும் இ-கழிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பல்வேறு வேதிப்பொருட்களை கையாள்வதால் அவர்களுக்கு பலவித நோய்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment