Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 12 April 2014

பூத் சிலிப் வழங்க இருக்கும் BLO க்களுக்கு,,,

ஒரு BLO க்கு குறைந்த பட்சம் 700 முதல் 1000 சிலிப்புகள் வழங்கப்பட்டு, அதை எதிர்வரும் 19 ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 15 ஆம் தேதிக்குள் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

எனவே, குறைந்த கால அவகாசத்தில் ஒவ்வொருவருக்கும் சிலிப்புகளை வழங்கி , கையொப்பம் பெற வேண்டும். நமக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இல்லாததால், சம்பந்தப்பட்ட வாக்காளரை இனம் கண்டு (1000 பேர் கொண்ட பட்டியலில்) அவருக்குரிய சீட்டை கொடுப்பது சற்று சிரமம்,, காலதாமதமும் ஆகும்,,
எனவே, ஒரு எளிய வழியாக,,
excel sheet ல் மொத்த வாக்காளர்களின் பெயர்களை ஒருவர் பின் ஒருவராக சீரியல் நம்பருடன் டைப் செய்து கொள்ள வேண்டும்,, சிலிப்புகள் கொடுக்க செல்லும் போது கையோடு லேப்டாப் ஐயும் கொண்டு சென்றால், வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் சிலிப்புகள் வாங்க கூட்டமாக நிற்கும் போது, சம்பந்தப்பட்ட வாக்களரின் பெயரை excel work sheetல், find option ல் டைப் செய்தால், அவரின் சீரியல் நம்பர் மற்றும் பெயர் வந்து விடும்,, விரைவில் அந்த எண்ணைப் பார்த்து அவருக்குரிய பூத் சிலிப்பை வழங்கி விடலாம்,,
(நான் இப்படித்தான் கொடுத்துக் கொண்டுள்ளேன்)

No comments:

Post a Comment