Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 16 April 2014

வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குச்சாவடி தலைமை அதிகாரி செய்ய வேண்டியது என்ன? இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள, வாக்குப்பதிவு நிறைவு பட்டனை (குளோசிங் பட்டன்) அழுத்துவதில்லை என்றும் இதனால் அதை தவறாக உபயோகிக்க வாய்ப்பு ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்ததாக கடந்த தேர்தல்களில் புகார்கள் கூறப்பட்டன. இதுதொடர்பாக பல அறிவுரைகளை தற்போது இந்திய தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.
அதன்படி, வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிந்ததும், அங்கிருக்கும் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் தலைமை அதிகாரி குளோஸ் பட்டனை அழுத்த வேண்டும்.கடைசி நபர் வாக்களித்துச் சென்றதும், அவரது வரிசை எண் பதிவு செய்யப்பட்டு, வாக்களித்தவர்களின் பெயர்களை பதிவு செய்யும் பதிவேட்டில் தலைமை அதிகாரி அடிக்கோடிட வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில், வாக்குச்சாவடிகளில் உள்ள கட்சி ஏஜெண்டுகளின் கையொப்பம் பெற வேண்டும்.
கட்சி ஏஜெண்டுகள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவர்களுக்கு, வாக்களித்தோர் தொடர்பான பதிவு ஆவணத்தின் நகலை சன்றொப்பமிட்டு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment