Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 13 April 2014

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பணி இடைநீக்கம்

பண்ருட்டி அருகே ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
  கடலூர் நகரைச் சேர்ந்தவர் சுந்தரி(52). இவர் பண்ருட்டி அடுத்துள்ள ஒறையூர் காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 
 இவருடன் பணியாற்றும் சக ஆசிரியரான, பண்ருட்டி தட்டாஞ்சாவடி, காந்தி நகரைச் சேர்ந்த குமரகுருநாதன்(36), கடந்த மூன்று ஆண்டுகளாக இவரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியும், பாலியல் தொல்லையும்  கொடுத்தும் வந்தாராம்.
  இதையடுத்து சக ஆசிரியைகள் சேர்ந்து கடந்த மாதம் 24-ஆம் தேதி, மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த குமரகுருநாதன் சில தினங்களுக்கு முன் ஆசிரியை சுந்தரியை வழிமறித்து அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.  இதுகுறித்து, சுந்தரி அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸார் குமரகுருநாதனை கடந்த 10 ஆம் தேதி கைது செய்தனர்.
 இந்நிலையில் ஆசிரியர் குமரகுருநாதனை பணி இடைநீக்கம் செய்து, மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் குணசேகரன் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment