Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 18 April 2014

வாக்குச் சாவடி அலுவலர்களை "நுண்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும்'

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது, வாக்குச் சாவடி அலுவலர்கள், தேர்தல் விதிமுறைகளுக்கு உள்பட்டு நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்கிறார்களா என்பதை வாக்குச் சாவடி நுண்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று, மத்திய பொது தேர்தல் பார்வையாளர் மாஸ்டரம் மினா வலியுறுத்தியுள்ளார்.

தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், வியாழக்கிழமை பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண்பார்வையாளர்களுக்குத் தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில், மத்திய பொதுத் தேர்தல் பார்வையாளர் மாஸ்டரம் மினா கலந்துகொண்டு பேசியது: வாக்குச் சாவடிகளில் நுண்பார்வையாளர்களாகப் பணியாற்றும் அலுவலர்கள், வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், கட்டுப்பாட்டுக் கருவி சரிபார்க்கப்படுகிறதா, மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். வாக்குச் சாவடியில் நியமிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டை வைத்துள்ளதை சரிபார்த்து உறுதி
செய்து கொள்ள வேண்டும்.

வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச் சாவடிக்கு கொண்டு வந்து வாக்களிக்கிறார்களா என்பதையும், வாக்குச் சாவடி பதிவேடுகளையும் கண்காணிக்க வேண்டும். வாக்குப் பதிவின்போது, வாக்குச் சாவடி அலுவலர்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு உள்பட்டு நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்கிறார்களா என்பதை கண்காணித்து, அவ்வப்போது தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் அளிக்க வேண்டும். வாக்குப் பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையத்துக்குக் கொண்டு சேர்த்து, அதற்கான ஆவணங்களை தேர்தல் பார்வையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment