Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday, 25 April 2014

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு மூடுவிழா?


தமிழகம் முழுவதும், அங்கீகாரம் இல்லாத, நர்சரி, பிரைமரி பள்ளிகளை, லோக்சபா தேர்தல் முடிந்ததும் மூட, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தொடக்க கல்வி இயக்குனரக வட்டாரம், நேற்று தெரிவித்தது. 400க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்படலாம் என, தெரிகிறது.

ஒவ்வொரு கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன், அங்கீகாரம் உள்ள பள்ளிகள், இல்லாத பள்ளிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, பள்ளிகள், அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும்.

இடப் பற்றாக்குறை:

உள்ளிட்ட, பல பிரச்னைகளில் சிக்கும் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் புதுப்பித்தல் உத்தரவை, இயக்குனரகம் வழங்குவது இல்லை. தற்போது, அங்கீகாரம் இல்லாத, நர்சரி, பிரைமரி பள்ளிகள் (எல்.கே.ஜி., முதல், ஐந்தாம் வகுப்பு வரை) குறித்து, கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

இது குறித்து, இயக்குனரக வட்டாரம், நேற்று கூறியதாவது: மாநிலம் முழுவதும், 7,000 நர்சரி, பிரைமரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. அங்கீகார நிலவரம் குறித்து, கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. 400 பள்ளிகள் வரை, அங்கீகாரம் இல்லாமல் இருக்கலாம். இந்த பள்ளிகளை மூடும் அதிகாரம், இயக்குனரகத்திற்கு கிடையாது. சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் தான், பள்ளிகளை மூட, உத்தரவிடுவர். லோக்சபா தேர்தல் முடிந்ததும், மே மாத இறுதிக்குள், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்படும். மூடப்படும் பள்ளிகள் குறித்த விவரங்களை, பொதுமக்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, இயக்குனரக வட்டாரம் தெரிவித்தது.

அரசு பள்ளிகளுக்காக நடவடிக்கை?

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார் கூறியதாவது: அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிந்து கொண்டே வருகிறது. தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளை, எதையாவது குறை கூறி, ஒவ்வொரு ஆண்டும், மூட உத்தரவிடுகின்றனர். அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை, அருகில் உள்ள அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். இவ்வாறு, நந்தகுமார் கூறினார்.

No comments:

Post a Comment