
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் கணக்கன்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக யூஜின் புருனோ பணியாற்றி வருகிறார். இவர் சேவை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். தற்போது இவர் பணியாற்றும் பள்ளியின் மாணவர்கள் கழிவறையை இவரே வாரம் ஒருமுறை சுத்தம் செய்கிறார். அவரை அனைவரும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.
இவரின் சேவையை பல்வேறு அமைப்புகள் பாராட்டி உள்ளன. சிறந்த ஆசிரியருக்கான ஏர் இந்தியா விருது. சிகரம் தொட்ட ஆசிரியருக்கான விருது உள்பட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். தான் பணிபுரியும் பள்ளிக்கு தமிழக அளவில் சிறந்த பள்ளிக்கான விருதையும் பெற்றுத்தந்துள்ளார். அந்த ஊரில் உள்ள நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி கிராம பிரமுகர்களுடன் இணைந்து பாடுபட்டார். இக்கிராம மக்கள் இவரின் சேவைகளை பாராட்டுகின்றனர்.
No comments:
Post a Comment