Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 3 April 2014

விழாவுக்கு அமைச்சரை அழைத்த பள்ளி மீது வழக்கு


பள்ளி ஆண்டு விழாவுக்கு அமைச்சரை அழைத்த பள்ளி நிர்வாகி மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டையில் ஒரு தனியார் பள்ளியின் ஆண்டு விழா கடந்த 31ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி கலந்து கொள்வதாக இருந்தது. இதனையொட்டி அமைச்சருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கும் வகையில் அதிமுக கட்சிக்கொடிகளுடன் தோரணமும், சின்னம் பொறிக்கப்பட்ட பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர் வீரமணி விழாவில் பங்கேற்கவில்லை.

கட்சிக்கொடிகள், சின்னங்கள் பொறித்த பேனர்கள் வைத்தது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயலாகும். இதுதொடர்பாக ஜோலார்பேட்டை விஏஒ மஸ்தான் அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியின் நிர்வாகி ராஜேஸ்வரி, அவரது மகள் ரேகா ஆகியோர் மீது தேர்தல் விதிமுறை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment