எல்.கே.ஜி., புத்தகத்தில் இடம் பெற்றுள்ள, சூரியன் படத்தை, நீக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை, நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த, புரச்சி சுரேஷ் என்பவர், தாக்கல் செய்த மனு: குழந்தைகளுக்கான, எல்.கே.ஜி., புத்தகத்தில், ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிடும் வகையில், படங்கள் இடம் பெற்றுள்ளன. 'எஸ்' என்ற எழுத்துக்கு, 'சன்' என குறிப்பிட்டு, கண்ணாடியுடன் கூடிய சூரியன் படம் அச்சிடப்பட்டுள்ளது. சூரியன், கண்ணாடி அணிந்திருப்பது போல் உள்ளது. இது, குறிப்பிட்ட ஒரு அரசியல் தலைவரை காட்டுவது போல் உள்ளது. தொடக்க கல்வியில், அரசியலை புகுத்துவது போல், இது உள்ளது. குழந்தைகளின் கல்வியில், அரசியல் கட்சி குறுக்கிடக் கூடாது. அரசியல் நோக்கத்தில், இத்தகைய படம் இடம் பெற்றுள்ளது. தமிழ் பாட்டில், 'கொக்கரகோ சேவலே' எனும் பாடலில், சூரியன் உதித்து எழுவது போல், படம் இடம் பெற்றுள்ளது. இத்தகைய புத்தகத்தை, 'உட்பெக்கர் பப்ளிஷர்ஸ்' நிறுவனம் மூலம் வெளியிட அரசு எப்படி அனுமதித்தது என தெரியவில்லை. எனவே, எல்.கே.ஜி., புத்தகத்தில் இடம் பெற்றுள்ள, இந்த இரண்டு பக்கங்களையும் நீக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. விசாரணையை, இம்மாதம், 3ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment