Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday, 5 April 2014

நூறு சதவீத தேர்ச்சிக்காக குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு அனுப்ப மறுக்கும் பள்ளிகள்


பெரும்பாலான தனியார் பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சிக்காக படிப்பில் பின்தங்கிய நிலையில் உள்ள 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவ, மாணவிகளை பள்ளியை விட்டு வெளியேற்றி வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் வேறு பள்ளிகளில் இடம் கிடைக்காமல் அல்லாடும் நிலை ஏற்படுகிறது. அதிக மாணவர்களை சேர்த்து, தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இருப்பதில்லை.
குறைந்த மாணவ, மாணவிகளை சேர்த்து 100 சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் குறிக்கோளாக உள்ளனர். இதனால் மாணவர் சேர்க்கையின் போது அதிக நன்கொடை வசூலிக்கலாம் என்ற எண்ணமும் அவர்களிடம் உள்ளது. ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. முதலோ அல்லது ஆறாம் வகுப்பில் இருந்தோ படிப்பவர்கள் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வந்தவுடன் அடுத்த ஆண்டிற்கு பொதுத்தேர்வுக்கு தகுதியுடையவர்களா என்பதை ஆலோசிக்கின்றனர்.
படிப்பில் மிகவும் பின்தங்கியவர்களை பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அனுப்பினால் தேர்ச்சி பெற மாட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டு, பெற்றோரிடம் உங்கள் குழந்தை சரியாக படிக்காததால் இந்தாண்டு பெயில் ஆக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வேறு பள்ளியில் சேர்ப்பதாக இருந்தால் தேர்ச்சியுடன் டிசி கொடுத்து விடுகிறோம் என்கின்றனர்.
பெயில் ஆனால் ஒரு ஆண்டு வீணாகிறதே என நினைக்கும் பெரும்பாலான பெற்றோர் தேர்ச்சியுடன் டிசியை பெற்றுக் கொள்கின்றனர். தங்களின் குழந்தைகள் நன்றாக படித்து உயர வேண்டும் என்ற நம்பிக்கையோடு தனியார் பள்ளிகளில் சேர்த்தால், சில தனியார் பள்ளிகள் இதுபோன்ற குறுக்கு வழிகளை கையாளுகின்றன. 
இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் மாணவர்களை பொதுத்தேர்வு எழுத விடாமல் செய்தால், சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் மற்றும் தலைமைஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment