Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 1 April 2014

பொறியியல் மாணவர் சேர்க்கையில் ஆன்-லைன் விண்ணப்ப முறை அமல்படுத்தப்படுமா?


தமிழகத்தில் பிளஸ்2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவுற்றது. இதில், 8.50 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுதாள்கள் திருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் மே மாதம் 2ம் வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக 2.50 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன. 

கடந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. ஜூன் 5ம் தேதி ரேண்டம் எண்ணும், 12ம் தேதி ரேங்க் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஜூன் 21ம் தேதி கவுன்சிலிங் தொடங்கியது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் கவுன்சிலிங்கில் 1 லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் நிரம்பின, சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தற்போது 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 

இந்த கல்லூரிகள் மூலம் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் பொறியியல் இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பணிகளில் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக இறங்கியுள்ளது. முதல்கட்டமான விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மே முதல் வாரம் விண்ணப்ப விநியோகமும், ஜூன் முதல் வாரத்தில் ரேண்டம் எண் வெளியீடும், ஜூன் 3வது வாரத்தில பொறியியல் கவுன்சிலிங்கும் தொடங் கும் என்று அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து கல்வியாளர் ஒருவர் கூறியதாவது: 

அண்ணா பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, சென்னை பல்கலைக்கழகம், மாவட்டங்களில் உள்ள உறுப்பு கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மையங்கள் அமைத்து விநியோகிக்கிறது. இதில் பொதுபிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500ம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250ம் வசூலிக்கப்படுகிறது. எனினும், தற்போது அனைத்து துறைகளிலும் ஆன்-லைன் விண்ணப்பங்கள் வந்துவிட்டன. இதன்படி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதுடன் ஆன்-லைன் மூலமே விண்ணப்பத்திற்கான கட்டணங்களையும் கட்டலாம் என்ற முறையை பல்கலைக்கழகம் நடைமுறைபடுத்த வேண்டும்.

இதனால் மாணவர்களுக்கு ஏற்படும், செலவும் அலைச்சலும் மிச்சமாகும். கடந்த சில ஆண்டுகளாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியிலும், இந்த முறை அமல்படுத்தப்படுமா என்ற கனவும், ஏக்கமும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆன்- லைன் விண்ணப்ப முறையை அமல் படுத்த அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment