Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 10 September 2014

பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் : அரசு பள்ளி மாணவர்கள் அவதி

தமிழக அரசு நீட்டிப்பு வழங்கியிருந்த, மூன்று மாத கால அவகாசம் முடிந்தும், இதுவரை, முழுமையாக விலையில்லா, 'பஸ் பாஸ்' வழங்காததால், அரசு பள்ளி மாணவர்கள், பணம் கொடுத்து, பஸ்சில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். தமிழக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், பஸ்சில் வரும் மாணவர்களுக்கு, விலையில்லா பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இருந்து, பஸ் பாஸ், 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் வழங்கப்படுகிறது. பஸ் பாஸ் வழங்க கால தாமதம் ஏற்படுவதால், தமிழக அரசு, நடப்பு கல்வியாண்டு துவங்கி, மூன்று மாதங்களுக்கு, (ஜூன் ஆகஸ்ட்) பழைய பஸ் பாசை பயன்படுத்திக் கொள்ளலாம் என, அரசாணை வெளியிட்டிருந்தது. தற்போது, மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இன்னும், 20 சதவீத மாணவர்களுக்கு, பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. பழைய பஸ் பாசும் காலாவதியாகி விட்டதால், மாணவர்கள், பஸ்சில் கட்டணம் செலுத்தி வர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், ஏழை, எளிய மாணவ, மாணவியர், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

No comments:

Post a Comment