Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday 22 September 2014

ஜி.பி.எப்., கணக்கு எண் இல்லைநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

தமிழகத்தில், நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான ஜி.பி.எப்., கணக்கு எண்கள் வழங்கப்படாததால், அவர்கள் சம்பளம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.நகராட்சிகளின் கீழ் 65 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 650க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, டீச்சர்ஸ் பிராவிடண்ட் பண்ட் (டி.பி.எப்.,) பிடித்தம் செய்யப்படுகிறது. இப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, ஆசிரியர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில், அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்யப்படுகின்றனர்.
அப்போது, அவர்களுக்கு ஜி.பி.எப்., கணக்கு துவங்கி, சம்பளத்தில் பணம் பிடித்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு, நகராட்சி பள்ளிகளில் இருந்து அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு பணிமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஜி.பி.எப்., கணக்கு எண்கள் துவங்கப்படவில்லை. இதுகுறித்து மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு எழுதி கேட்டால், அரசுப்பள்ளி என குறிப்பிட்டால் தான் 'ஜி.பி.எப்., கணக்கு எண்' துவக்க முடியும், என தெரிவித்துத்துள்ளது.
ஆசிரியர்கள் தற்போது கருவூலம் மூலம் சம்பளம் பெறவும், ஜி.பி.எப்., கணக்கு எண் முக்கியம் என வலியுறுத்தப்படுகிறது. 'அந்த கணக்கு எண் இல்லை என்றால் சம்பளம் வழங்க முடியாது' என கருவூலங்களும் கைவிரித்துவிட்டன. இதனால், இனி வரும் மாதங்களில் நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க மதுரை செயலாளர் பிரபாகரன், சட்ட செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், 'அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான நடைமுறைகளை நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் நீடிக்க வேண்டும். நான்கு ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஜி.பி.எப்., வங்கி கணக்குகளை நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment