Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday 28 September 2013

செயல்வழி கற்றல் அட்டைகள் முடக்கம் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் அரசு பணம் விரயம் - DINAMALAR NEWS

ஈரோடு: ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின், மாவட்ட திட்ட அலுவலகத்தில், தமிழக அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வழங்கப்பட்ட ஏ.பி.எல்., அட்டைகள், பள்ளிக்கு அனுப்பாமல், குப்பையாக போட்டுள்ளனர்.
அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இடைநிலை கல்வியை உறுதி செய்வதற்காக, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகள் பங்களிப்புடன் நடைமுறையில் உள்ளது. 2017ம் ஆண்டுக்குள், 16 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும், இடைநிலை கல்வி வழங்குதல், 2020க்குள், 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும், மேல்நிலை கல்வி வாய்ப்பை ஏற்படுத்துதல், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி உள்ளிட்டவை வழங்குவது, இடைநிலை கல்வி திட்டத்தின் குறிக்கோளாகும்.
ஈரோடு, பெரியார் வீதியில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மாவட்ட திட்ட அலுவலகம் இயங்குகிறது. இங்கு, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், பள்ளிகளுக்கு வழங்க விதவிதமான செயல் வழிக்கற்றல் அட்டைகள், பண்டலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தில் உள்ள பாடங்கள் தொடர்பாக, அனைத்தும் தனித்தனியே லேமினேஷன் செய்யப்பட்ட, வண்ண அட்டைகளாக உள்ளன. ஒவ்வொரு துவக்கப்பள்ளி குழந்தைகளும், தானாகவே படித்து கொள்ளும் முறையில் இந்த அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏணிப்படிகள், உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், படங்கள் பார்த்து புரிந்து கொள்ளும் படியான படங்கள் என அனைத்தும் பண்டல் பண்டலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டைகள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி, அதனை வகுப்பாசிரியர்கள் பயன்படுத்தி, குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கின்றனரா என்பதை ஆய்வு செய்யும் பணி ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு உள்ளது. அதனை கண்காணிக்கும் பணி ஒவ்வொரு வட்டார வளமைய மேற்பார்வையாளருக்கு உள்ளது. ஆனால், மாவட்ட திட்ட அலுவலகத்தில் குப்பையாக குவிக்கப்பட்டுள்ள, ஏ.பி.எல்., அட்டைகள், பல மாதங்களாக பள்ளிக்கு அனுப்பப்படாமல் குவித்து வைத்துள்ளனர்.
இதுபற்றி, அந்த அலுவலகத்தின் ஆசிரியர் பயிற்றுனர் சிவக்குமாரிடம் கேட்டபோது, ""யாரை கேட்டு அலுவலகத்துக்குள் வந்தீர்கள். இந்த அட்டையை அனுப்ப வேண்டிய அவசியமில்லை. என் பெயர் சிவக்குமார். யாரிடம் வேண்டுமானாலும் பேசிக் கொள். சி.இ.ஓ.,வுக்கே நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. வெளியே செல்லுங்கள்,'' என்றார்.
இதுபற்றி, ஈரோடு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமணியிடம் கூறியதும், ""என்ன வேண்டுமானாலும் செய்தி போட்டு கொள்ளுங்கள். பார்த்துக்கொள்கிறோம்,'' என்றார்.
ஈரோடு மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி கூறுகையில், ""எல்லா வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களும் இப்படித்தான் இருக்காங்க. என்ன செய்வது. வெளியே சொன்னால் வெட்கக்கேடு,'' என்றார்.அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதாக எண்ணும் அரசுக்கும், இதை கவனிக்க வேண்டிய மாவட்ட நிர்வாகத்துக்குமே வெளிச்சம்.

Click Here

No comments:

Post a Comment