Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 30 April 2014

Excess BTs/ SGT Details Called by DEE | ஊராட்சி/ நகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 01.09.2013ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைப் படி உபரியாக உள்ள இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு

கோடைக்கால பயிற்சி முகாம் நடத்த உத்தரவு

                    

ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’ ஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண்


தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள் பெற்ற மதிப் பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு 
மாற்றிக்கொள்ளும் வகையில் தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஏற்கெனவே சான்றி தழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 48 ஆயிரம் பேர் உள்பட 73 ஆயிரம் பேருக் கும் புதிய கட் ஆப் மதிப்பெண் வரும். உதாரணத்துக்கு பழைய முறையில், தகுதித்தேர்வில் 90 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றாலும் அனைவருக்கும் 60 மார்க் வழங்கப்படும். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி 95 சதவீத மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே முறைதான் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் அனைத்து கணக்கீட்டுக்கும் பொருந்தும் எனவே, அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணுக்கு தக்கவாறு கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள். உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு புதிதாக சரிபார்ப்பு நடத்தப்படுமா, ஆசிரியர் நியமனம் தாமதம் ஆகுமா என்று கேட்டதற்கு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் மதிப்பெண் விவரம் எங்களிடம் உள்ளது. கணினி மூலம் அவர்கள் அனைவருக்கும், புதிய முறையில் மதிப்பெண் கணக்கிட்டுவிடலாம். இதற்கு எவ்வித காலதாமதமும் ஆகாது. அவர்களின் புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அரசு ஊழியர் ஜிபிஎப் வட்டி 8.7% ஆக நீடிக்கும்


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக தமிழக அரசின் செலவினங்கள் துறைச் செயலாளர் உதயச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: பொது வருங் கால வைப்பு நிதியின் வட்டியை மத்திய அரசு நிர்ணயம் செய்துள் ளது. அதன்படி, அதன் பயனாளி களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.7 சதவீதமாகத் தொடரும். 2014-15 நிதியாண் டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஜி.பி.எஃப் வட்டி விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

7979 B.T ASSISTANTS TEMPORARY POST CONTINUATION ORDER FOR A PERIOD OF 3 MONTHS FROM 1.4.14--RCNO 014905/L3/2014 DT:21.04.2014

Kipson Tata வேண்டுகோள்:


கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற நினைக்கும் ஆசிரியர்களுக்கு TATA வின் எச்சரிக்கை அறிவிப்பு 

ஏற்கனவே நமது சங்கம் இலஞ்ச ஒழிப்பு காவல் துறையில் கொடுத்த புகார் ( 1000 கோடி நிர்வாக பணி மாறுதல் ஊழல் ) வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது . அதன் பேரில் தற்போது அனைத்து கல்வித்துறை அலுவலங்களிலும் 2006 முதல் 2011 வரை கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற்றவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது ..

தயவு செய்து இனிமேல் கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற வேண்டாம் TATA எச்சரிக்கை செய்கிறது .

நமது சங்கம் வழக்கு மூலம் 2006 க்கு பின் பணம் கொடுத்து மாறுதல் பெற்றவர்களுக்கு மிக பெரிய பாதிப்பு வர உள்ளது என்பதால் தயவு செய்து இனிமேல் கையூட்டு கொடுத்து பணி மாறுதல் பெற வேண்டாம் TATA எச்சரிக்கை செய்கிறது

இருக்கை முற்றுகைக்கு உள்ளான உதவி தொடக்க கல்வி அலுவலர்


மடத்துக்குளம் உதவி தொடக்ககல்வி அலுவலரை, ஆரம்பபள்ளி ஆசிரியர்கள், மூன்று மணிநேரம் இருக்கை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மடத்துக்குளம் ஒன்றித்துக்குட்பட்ட ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, நிலுவைத்தொகை, அகவிலைபடி ஆகியவை வழங்குவதில் உதவிதொடக்ககல்வி அலுவலர் மற்றும் உதவியாளர் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், இதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து, நேற்றுமுன்தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 7.45 மணி வரை உதவி தொடக்ககல்வி அலுவலர் சிவசுப்பிரமணியத்தை இருக்கை முற்றுகையிட்டனர்.

இதனால் இவர், பணி நேரம் நிறைவடைந்த பின்னும், மூன்று மணி நேரம் தனது இருக்கையிலேயே தற்காலிகமாக சிறைபிடிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கூறியது: இந்த அலுவலகத்தின் கீழ் பணியாற்றும், 250 ஆசிரியர்களில், 150 பேருக்கு மட்டும் நிலுவைதொகை மற்றும் இதர படிகள் உடனடியாக வழங்கப்படுகிறது. மீதி உள்ளவர்களின் கோப்புகளை அனுப்பும்போது, அதில் உள்ள ஆவணங்களை திட்டமிட்டு கிழித்தோ, அகற்றியோ அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் எங்கள் கோப்புகள் மறு தணிக்கைக்கு ஆட்படுத்தப்பட்டு, அதிக கால தாமதம் ஏற்படுகிறது.

இதற்கு அடிப்படை காரணமாக உள்ள அலுவலக உதவியாளரை இடமாற்றம் செய்யவும், எங்களுக்கு உடனடியாக தொகைகள் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை எங்கள் உயர் அதிகாரிகள் செய்யும் வரை, இந்த முற்றுகை தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உதவி தொடக்கல்வி அலுவலர் சிவசுப்பிரமணியம் கூறுகையில், "அனைத்து ஆசிரியர்களின் கோப்புகளிலும் கையொப்பமிட்டு, 2013 டிசம்பர் மாத தொடக்கத்திலேயே அனுப்பப்பட்டு விட்டது. இதில் உரிய ஆவணங்கள், சான்று சீட்டுகள் இல்லாத ஆசிரியர்களின் கோப்புகளை மட்டும் மறு தணிக்கைக்காக திருப்பி அனுப்பி உள்ளனர். எனக்கு உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும், இந்த கோப்புகளை சரிபார்த்து வருகிறேன்" என்றார்.

மூன்று மணிநேரத்துக்கும் மேல், முற்றுகை தொடர்ந்த நிலையில், உடுமலை உதவி தொடக்க கல்வி அலுவலர் மனோகரன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அரை மணிநேரத்துக்கு பின், இந்த பிரச்னைக்கு காரணமாக கூறப்படும் மயூரிநாதன் என்பவரை இடமாற்றம் செய்ய உறுதி வழங்கியதையடுத்து, ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.

சிக்கல்களை கடந்து ஆசிரியர் நியமனம் எப்போது?


பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம் ஜவ்வாக இழுக்கிறது.

ஜூனில் பள்ளிகள் திறக்கின்றன. ஆனால் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,895 முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் 12 ஆயிரம் பேரை நியமனம் செய்யும் பணி பல மாதங்களாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.

சிக்கல்
கடந்த ஆண்டு மத்தியில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வும், கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வும் (டி.இ.டி.) இதுவரை நிறைவு பெறவில்லை. முதுகலை ஆசிரியர்களில், தமிழ் ஆசிரியர்கள் மட்டும் நியமனம் செய்யப்பட்டு விட்டனர். இதர பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வு, இடியாப்ப சிக்கலாக உள்ளது. எந்த தேர்வை எடுத்தாலும் நீதிமன்ற வழக்கில் இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கூறுகிறது.

இதனால் முதுகலை ஆசிரியர்கள் எப்போது நியமனம் செய்யப்படுவர் என தெரியாத நிலை உள்ளது. டி.இ.டி. தேர்வில் மதிப்பெண் சலுகை அளித்ததன் காரணமாக, இரண்டாவது சுற்று சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது.
கூடுதலாக தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 6 முதல் 12ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

புதிய ஆசிரியர்கள்
இந்த தேர்வு தொடர்பாகவும், வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறந்ததும், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது. குறிப்பாக முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதேபோல் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யாததால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "வழக்குகள் விரைவில் முடிவுக்கு வந்து விடும். மாணவர்கள் கல்வி பாதிக்காத அளவிற்கு, புதிய ஆசிரியர்களை விரைந்து நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தது.

ஒரு மாணவர் கூட பாஸாகாத 54 முன்னணி என்ஜினியரிங் காலேஜ்கள்... அதிர்ச்சியில் பெற்றோர்

தமிழகத்தில் உள்ள 54 பொறியியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் ஒருவர் கூட பாஸ் ஆகவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தடுக்கி விழுந்தால் பொறியியல் கல்லூரிகள், பள பளா கட்டடங்கள் என்று தமிழகத்தில் புற்றீசல் போல நூற்றுக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும் தரம் என்னவோ மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. இதனை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது கடந்த வாரம் வெளியான அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள். அதன்படி, இந்த ஆண்டில் முதல் செமஸ்டரில் 54 கல்லூரிகளில் ஒருவர் கூட பாஸ் ஆகாத கொடுமை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இதற்கு என்ன காரணம் என்பது தான் தெரியவில்லை.
ஒருவர் கூட பாஸ் இல்லை... 
முதல் செமஸ்டருக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த வாரம் வெளியிட்டது. அதில் இந்த 54 என்ஜீனியரிங் கல்லூரிகள் மற்றும் 2 தொழில்நுட்பக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவர் கூட தேறவில்லை.

நல்ல ரேங்கிங் காலேஜ்கள்... 
இவர்களில் யாருமே ஒரு பேப்பரில் கூட பாஸ் ஆகவில்லை என்பதுதான் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும், இந்தக் கல்லூரிகள் அனைத்துமே இத்தனைக்கும் ஓரளவுக்கு நல்ல ரேங்கிங்கில் உள்ளவைதாம்.

உயர் கல்விக்குப் பெயர் போனவை... 
இவைகளில் பெரும்பாலான கல்லூரிகள் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகள் மற்றும் கோவையைச் சேர்ந்தவையாகும். உயர் கல்விக்குப் பெயர் போன இடங்கள் இவை என்பது இன்னொரு ஆச்சரியம்.

அதிர்ச்சிக் கொடுத்த முன்னணிக் கல்லூரிகள்... 
அதேபோல முன்னணிக் கல்லூரிகள் எதுவுமே இந்த முறை 100 சதவீத தேர்ச்சியைக் காட்டவில்லை. இது இன்னொரு அதிர்ச்சி செய்தி.

கல்லூரிகளின் தவறு... 
அதிகபட்ச பாஸ் சதவீதமே 87.45 சதவீதம்தான். உயர்தரமான கல்வியைக் கொடுக்க இந்தக் கல்லூரிகள் தவறி விட்டதையே இது காட்டுவதாக கல்வியாளர் ஒருவர் வருத்தத்துடன் கூறுகிறார்.
தேர்ச்சி சதவீதம்... 
421 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் கீழேதான் தேர்ச்சி விகிதம் உள்ளது. 115 கல்லூரிகள்தான் 50 சதவீத தேர்ச்சியைத் தாண்டியுள்ளன.
ஒரு சதவீதம் தானாம்... 
357 கல்லூரிகளில் 40 சதவீதத்திற்கும் கீழே உள்ளது தேர்ச்சி விகிதம். 59 கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் ஒரு சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கலக்கத்தில் பெற்றோர்... 
தேர்வு முடிவுகள் அக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களை பெரிதும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளதாம். இதனால், இந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் எதனடிப்படையில் தங்களது பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பது என்ற குழப்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு நோட்டீசு


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த 1–ந் தேதி முதல் 2014-2015-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பள்ளிகளும், ஏப்ரல் மாதத்தில்தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்த நிலையிலும், தனியார் பள்ளிகள் கடந்த ஜனவரி மாதமே விண்ணப்பங்கள் வழங்கி மாணவர் சேர்க்கையை தொடங்கி விட்டன.

அதேபோல, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக நேர்காணல் மற்றும் நுளைவுத்தேர்வுகளை நடத்தக்கூடாது, இது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தவறு என்றும் பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்தநிலையில், கோவை “வெரைட்டி ஹால்” சாலையிலுள்ள போலீஸ் குடியிருப்பு அருகில் உள்ள சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில், 6, 7 மற்றும் 8–ம் வகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றுள்ளது.

முந்தைய வகுப்புகளில் மாணவர்கள் படித்த பாடப்புத்தகங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கேளவிகளை கொண்டு 30 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், மேற்படி பழியில் மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதாக கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அதிகாரிகள் நுழைவுத்தேர்வு நடத்துவதை நிறுத்தினார்கள். இது தொடர்பாக நுழைவுத்தேர்வு நடத்திய அந்த பள்ளிக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.

இது தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்துவது தவறாகும். இதன்படி நுழைவுத்தேர்வு நடத்திய சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளிக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. இதுபோல் விதிமுறை மீறும் பள்ளிகளுக்கும் நோட்டீசு வழங்கி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

கூடுதலாக சிறப்புப் பள்ளி திறக்க மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை: முதல்வருக்கு கடிதம்


மாற்றுத் திறனாளிகளுக்காக கூடுதல் பள்ளிகள் திறப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங் கம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா வுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பார்வையற்றோ ருக்கான சிறப்பு மேல்நிலைப் பள்ளிகள் சென்னை பூந்தமல்லி, திருச்சி ஆகிய 2 இடங்களில் மட்டுமே உள்ளன. இது போதுமான தல்ல. கூடுதலாக சிறப்புப் பள்ளி கள் திறக்கவேண்டும். மேலும், 10-ம் வகுப்புக்குப் பிறகு மேல்படிப்புக்காக சென்னைக்கு வரவேண்டிய நிலை உள்ளது.

எனவே தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை உள்ள பார்வையற் றோர் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண் டும். தஞ்சாவூரில் உள்ள பார்வை யற்றோர் உயர்நிலைப் பள்ளியை இந்தக் கல்வியாண்டிலேயே மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். காது கேளாதோருக் கான மேல்நிலைப் பள்ளி தஞ்சா வூர், தருமபுரி ஆகிய 2 இடங்களில் மட்டுமே உள்ளன. இதுவும் போதுமானதல்ல. காஞ்சிபுரத்தில் இயங்கும் இருபாலருக்கான அரசு காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக்க வேண்டும்.

கல்லூரிகளில் சிறப்புப் பிரிவு

சென்னை மாநில கல்லூரியில் பி.காம்., பி.சி.ஏ. ஆகிய 2 சிறப்புப் பட்டப் படிப்புகள் காதுகேளாதோ ருக்காக நடத்தப்படுகிறது. தஞ்சை, தருமபுரி, கோவை, மதுரை, நெல்லை மாவட்டங்களில் உள்ள அரசுக் கல்லூரிகளிலும் இதுபோல காதுகேளாதோருக்கான சிறப்புப் பட்டப் படிப்புப் பிரிவு தொடங்கப் பட வேண்டும். மாநிலக் கல்லூரி யில் இந்தக் கல்வியாண்டில் முது நிலைப் பட்டப் படிப்புகளையும் தொடங்க ஆவன செய்ய வேண் டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’


உயர் நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும். தமிழகத்தில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை தமிழகம் முழுவதும் 5.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மார்க்) ஆகும். அதன்படி, தகுதித்தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் எடுத்து 27 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சிபெற்றனர்.

வெயிட்டேஜ் மதிப்பெண் முறை

அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் சுமார் 24 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவுசெய்திருந்தது. தகுதித்தேர்வு மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண், பட்டப் படிப்பு மதிப்பெண், பி.எட். மதிப்பெண் (இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தகுதித்தேர்வு, பிளஸ்-2, ஆசிரியர் பட்டயப் படிப்பு மதிப்பெண்) அடிப்படையில் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு தேர்விலும் குறிப்பிட்ட மதிப்பெண் சதவீதம் முதல் குறிப்பிட்ட சதவீதம் வரை குறிப்பிட்ட மார்க் நிர்ணயிக்கப்பட்டு அதன்படி கட் ஆப் மதிப்பெண் தயாரிக்க முடிவுசெய்யப்பட்டு அதன் அடிப்படை யிலேயே 27 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தி முடிக்கப்பட்டது.

மதிப்பெண் சலுகை

இதற்கிடையே, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண் தேர்ச்சி 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக (150-க்கு 82 மார்க்) குறைத்து கடந்த பிப்ரவரி 6-ம் தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது. 5 சதவீத மதிப்பெண் சலுகையால் கூடுதலாக 46 ஆயிரம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டியது.

இதற்கிடையே, கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 21 ஆயிரம் பேருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான (சுமார் 25 ஆயிரம் பேர்) சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் 12-ம் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

புதிய கட் ஆப் மார்க்

இந்நிலையில், தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள் பெற்ற மதிப்

பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஏற்கெனவே சான்றி

தழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 48 ஆயிரம் பேர் உள்பட 73 ஆயிரம் பேருக் கும் புதிய கட் ஆப் மதிப்பெண் வரும். உதாரணத்துக்கு பழைய முறையில், தகுதித்தேர்வில் 90 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றாலும் அனைவருக்கும் 60 மார்க் வழங்கப்படும். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி 95 சதவீத மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பெண்ணுக்கு ஏற்ப கட் ஆப்

இதே முறைதான் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் அனைத்து கணக்கீட்டுக்கும் பொருந்தும் எனவே, அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணுக்கு தக்கவாறு கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள்.

ஆசிரியர் தேர்வு: ஐகோர்ட் புது உத்தரவு- வெயிட்டேஜ் மதிப்பெண் முறை செல்லாது என அறிவிப்பு


தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்வதற்காக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தற்போதைய முறை செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறை தொடர்பாக கடந்த 5.10.2012 மற்றும் 14.2.2014 ஆகிய தேதிகளில் அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 60 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு 15 மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்காக 25 என மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களுக்காக 60 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 10, பட்டப் படிப்பு மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 15 மற்றும் பி.எட். படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்காக அதிகபட்சம் 15 என மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வகை செய்யப்பட்டது.

இதன்படி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களில் 90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 60 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கிடைக்கும். 80 முதல் 89 சதவீதம் பெற்றவர்களுக்கு 54 வெயிட்டேஜ் மதிப்பெண்களும், 70 முதல் 79 சதவீதம் வரை பெற்றவர்களுக்கு 48 மதிப்பெண்களும் 60 முதல் 69 சதவீதம் வரை பெற்றவர்களுக்கு 42 மற்றும் 55 முதல் 59 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு 36 வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கிடைக்கும்.

இதேபோல் 12-ம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப தனித்தனி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கிடைக்கும். யார் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண் பெறுகிறார்கள் என்ற அடிப்படை யில் தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்கப்படும். இதேபோன்று பட்டதாரி ஆசிரியர் நியமனத் துக்கும் வெயிட்டேஜ் மதிப் பெண்கள் வழங்கப்பட்டு, தேர்ச்சிப் பட்டியல் தயாரிக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சதவீதத்திலிருந்து இன்னொரு குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே விதமான வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறை சரியானது அல்ல என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இது தொடர்பான அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று மனுக்களில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி எஸ்.நாகமுத்து, வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தற்போதைய முறை பாகுபாடு நிறைந்தது என்றும், இந்த முறை செல்லாது என்றும் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:

பள்ளி, கல்லூரி படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பிலும் ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப சரியான விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும்முறை தற்போது இல்லை. தகுந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெறாமல் இந்த வெயிட்டேஜ் முறை உருவாக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு, ஆசிரியர் பயற்சி படிப்பு மற்றும் தகுதித் தேர்வில் ஒவ்வொரு மாணவரும் பெற்ற மதிப்பெண் களுக்கு ஏற்ப சரியான விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அந்த முறை யானது அறிவியல் ரீதியாக சரியானதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5 சதவீத சலுகையை 2012-ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட வேறு சில மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

அண்ணாமலை பல்கலை. அதிரடி: சொத்து கணக்கு காட்ட உத்தரவு; ஆசிரியர் - ஊழியர்கள் அதிர்ச்சி


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் சொத்து விவரத்தை அளிக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் பல்கலை நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 13 ஆயிரத்து 500 ஆசிரியர்கள், ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசுஎடுத்த உடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தமிழக அரசின் முதன்மை செயலாளருமான ஷிவ்தாஸ் மீனா நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் அதிரடி நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக நிதி நிலைமையை ஓரளவு சரி செய்தார்.

நேற்று பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்து கணக்கு, இன்சூரன்ஸ் செய்திருந்தால் அதன் விவரம், வங்கி, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால் அதைப்பற்றிய முழு விவரம், சேமநலநிதி பற்றிய விவரம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நிர்வாகம் அனுப்பி உள்ள சொத்து விவர சுற்றறிக்கையால் ஆசிரியர்கள், ஊழியர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் வேறு எந்த தொழிலும் செய்யக்கூடாது என்று கடந்த சில மாதங்களுக்கு முன் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNTET: New method TET Weightage mark calculator

ஆசிரியர்களே உங்கள் பதவி ஊயர்வு, பணிமாறுதல் கையூட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளதா ?




Kipson Tata
அன்பார்ந்த ஆசிரியர்களே கையூட்டு கொடுத்து பணிமாறுதல் பெற்று வரும் ஆசிரியர்களால் உங்கள் பதவி ஊயர்வு பாதிக்கப்பட்டு உள்ளதா ?
இதோ உங்கள் பாதிப்பை போக்கிட நீதிமன்ற ஆணை ...2 வாரத்தில் பதவி உயர்வு வழங்கிட ஆணை ...
பாதிப்பு உள்ளவர்கள் TATA மாநில அமைப்பை தொடர்பு கொள்ளவும் ...9443464081.

மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்திய பள்ளிக்கு நோட்டீசு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த 1–ந் தேதி முதல் 2014-2015-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பள்ளிகளும், ஏப்ரல் மாதத்தில்தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்த நிலையிலும், தனியார் பள்ளிகள் கடந்த ஜனவரி மாதமே விண்ணப்பங்கள் வழங்கி மாணவர் சேர்க்கையை தொடங்கி விட்டன.
அதேபோல, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக நேர்காணல் மற்றும் நுளைவுத்தேர்வுகளை நடத்தக்கூடாது, இது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தவறு என்றும் பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்தநிலையில், கோவை “வெரைட்டி ஹால்” சாலையிலுள்ள போலீஸ் குடியிருப்பு அருகில் உள்ள சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளியில், 6, 7 மற்றும் 8–ம் வகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றுள்ளது.
முந்தைய வகுப்புகளில் மாணவர்கள் படித்த பாடப்புத்தகங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கேளவிகளை கொண்டு 30 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மேற்படி பழியில் மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதாக கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அதிகாரிகள் நுழைவுத்தேர்வு நடத்துவதை நிறுத்தினார்கள். இது தொடர்பாக நுழைவுத்தேர்வு நடத்திய அந்த பள்ளிக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.
இது தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடத்துவது தவறாகும். இதன்படி நுழைவுத்தேர்வு நடத்திய சி.எஸ்.ஐ. ஆண்கள் பள்ளிக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. இதுபோல் விதிமுறை மீறும் பள்ளிகளுக்கும் நோட்டீசு வழங்கி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இலவச பாட புத்தகங்கள் மே 15 க்கு முன் விநியோகம் – கல்வித்துறை அறிவிப்பு

தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான இலவச புத்தகங்கள் வழங்கும் திட்டத்தில் உயர் வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி முடிந்து விட்டது. தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது. திருவான்மியூர் கிடங்கில் இருந்து அனைத்து வட்டார அலுவலகங்களுக்கும் பாடப்புத்தகங்களை பிரித்து லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த மாவட்ட குடோன்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. 

ரிசல்ட்க்கு பின் புத்தகம்: 
புத்தகங்களை அச்சகங்களில் இருந்து நேரடியாக அனுப்பும் பணியும் தொடங்கியுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பிளஸ் 2 பாடப்புத்தகங்களை பிளஸ் 1 ரிசல்ட் வெளியிட்ட பிறகு தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்குவார்கள். 

16 லட்சம் புத்தகங்கள்: 
இதைதொடர்ந்து 22 வட்டார அலுவலகங்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆகிய இடங்களில் புத்தகங்கள் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. விற்பனைக்காக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் சுமார் 16 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 

முப்பருவ முறை புத்தகங்கள்: 
இலவச பாடநூல் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக 64 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான முப்பருவ முறை புத்தகங்கள் மே 15 ஆம் தேதிக்குள் அனைத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் திட்டமிட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பு புத்தகங்கள்: 
ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு தொகுதி புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு இந்த ஆண்டு முப்பருவ முறை இல்லை என்பதால் கடந்த ஆண்டு பயன்பாட்டில் இருந்த அதே புத்தகமே இந்த ஆண்டும் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன. அதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கிறது. 

கையில் புத்தகம்: 
1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு தலா ஒரு புத்தகம், 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு தலா 2 புத்தகங்கள் என அச்சிடப்பட்டுள்ளன. ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்கள் கையிலும் புதிய புத்தகங்கள் இருக்கும். 

தேர்வு முடிவுகள்: 
பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களை 9 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான பிறகு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குவார்கள். மே 15க்குள் விநியோகம்: பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் சுமார் 75 லட்சம் அச்சிடப்படுகின்றன. பத்தாம் வகுப்பு புத்தகங்கள் வினியோகம் செய்த பிறகு படிப்படியாக மற்ற வகுப்பு புத்தகங்கள் மே மாத இறுதிக்குள் வழங்கப்படும். ஆனால் மே 15 ஆம் தேதிக்குள் அனைத்து வகுப்பு புத்தகங்களும் வழங்கப்படும் என்று பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் ஜூன் 2-ந்தேதி திறப்பு


தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்துக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) மே 1-ந் தேதி முதல் விடுமுறை விடப்பட உள்ளது. 

விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் ஜூன் மாதம் 2-ந் தேதி திறக்கப்படுகின்றன. அப்போது 1-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை (11-வது வகுப்பு தவிர) அனைத்து வகுப்புகளும் அன்றைய தினம் தொடங்கப்பட உள்ளன. 

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே 23-ந் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தேர்வு முடிவு வந்த அன்றே மதிப்பெண்ணை இணையதளத்தில் ஜெராக்ஸ் எடுத்து விடலாம். அதைக்கொண்டு பிளஸ்-1 சேரும் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். 

மாணவர் சேர்க்கை முடிந்து ஜூன் மாதம் 16-ந் தேதி பிளஸ்-1 வகுப்புகள் தொடங்குகின்றன. சில பள்ளிகளில் ஜூன் மாதம் முழுவதும் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடந்து கொண்டே இருக்கும். கோடை விடுமுறைக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கும் அன்றே அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் 2 செட் சீருடைகளும் வழங்கப்பட உள்ளது. 

தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற்கனவே 60 சதவீத பாடப்புத்தகங்களையும், நோட்டு புத்தகங்களையும் அச்சடித்து தமிழ்நாடு முழுவதும் அனுப்பிவைத்துள்ளது. 1-வது முதல் 5-வது வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அதுபோல 6-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளனர். 100 சதவீத புத்தகங்களும் அதாவது மொத்தம் 7 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மே மாதம் 15-ந்தேதிக்குள் தயாராகி மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட உள்ளது. 

பள்ளிக்கூடங்கள் திறக்கும் அன்று அனைத்து பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும். அனைத்து விலை இல்லா பொருட்களும் பள்ளிக்கூடம் திறந்து 6 மாதங்களுக்குள் வழங்கப்பட உள்ளது என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’ ஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண்


தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள் பெற்ற மதிப் பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு

மாற்றிக்கொள்ளும் வகையில் தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஏற்கெனவே சான்றி தழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 48 ஆயிரம் பேர் உள்பட 73 ஆயிரம் பேருக் கும் புதிய கட் ஆப் மதிப்பெண் வரும். உதாரணத்துக்கு பழைய முறையில், தகுதித்தேர்வில் 90 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றாலும் அனைவருக்கும் 60 மார்க் வழங்கப்படும். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி 95 சதவீத மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே முறைதான் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் அனைத்து கணக்கீட்டுக்கும் பொருந்தும் எனவே, அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணுக்கு தக்கவாறு கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள். உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு புதிதாக சரிபார்ப்பு நடத்தப்படுமா, ஆசிரியர் நியமனம் தாமதம் ஆகுமா என்று கேட்டதற்கு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் மதிப்பெண் விவரம் எங்களிடம் உள்ளது. கணினி மூலம் அவர்கள் அனைவருக்கும், புதிய முறையில் மதிப்பெண் கணக்கிட்டுவிடலாம். இதற்கு எவ்வித காலதாமதமும் ஆகாது. அவர்களின் புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு: முரண்பாடுகளைக் களைய கோரிக்கை.

"மேல்நிலைப்பள்ளி ஹெச்.எம்.,களுக்கு பதவியுயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும்" என, தஞ்சையில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டம்தஞ்சை மேம்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், மாவட்ட துணைத்தலைவர்கிருஷ்ணன் தலைமை வகித்தார். 
மாவட்ட செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ரமேஷ், மாவட்ட அமைப்பு சாரா செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்து பேசினர்.இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு பதவி உயர்வில்உள்ள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள முன்னாள் இயக்குனர் கருணாகரன் தலைமையிலான சீராய்வு குழு அறிக்கையை விரைந்து பெற்று உரிய தீர்வுகளை வழங்க வேண்டும். பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்வு விடைத்தாள் முகப்பு சீட்டுதைப்பதற்கு தாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வழங்க வேண்டும்.ஓய்வு பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய பணப்பலன்களை 2013-14ம் கல்வியாண்டில் காலதாமதமின்றி பெற்று வழங்க சி.இ.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளஸ் 2 செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வுக்கு உரிய சில்லரை செலவினத்தொகையை இதுவரை வழங்காமல், சி.இ.ஓ. காலம் தாழ்த்தி வருவது கண்டனத்துக்குரியது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாதாமாதம் ஊதியம் பெற்றுத்தருவதில் வேண்டும் என்றே காலதாமதம் செய்யும் கல்வி மாவட்ட அலுவலர் போக்கை கண்டிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் அறிக்கையை தலைமையாசிரியருக்கு கூறாமல், வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என, இமெயில் மூலம் புகார் அனுப்பியும், மாணவர்கள் பெயர் பட்டியல், அனுமதித்த தொகை பட்டியல் தராமல் குழப்பமான நிலையை ஆதிதிராவிடர் நல அலுவலக அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இதற்குரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என, தஞ்சை கலெக்டரை வலியுறுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எல்லா பள்ளிகளிலும் ஆங்கில மீடியம்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

தொடக்கக் கல்வித்துறைக்கான பொது மாறுதல் விண்ணப்பப்படிவம்

MANONMANIAM SUNDARANAR UNIVERSITY DDCE MAY 2014 EXAM TIME TABLE

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும்: தேர்ச்சி பெற்ற முதுநிலைப் பட்டதாரிகள் கோரிக்கை

ஆசிரியர் தேர்வுவாரியத் தேர்வில், தேர்ச்சி பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசி ரியர்களுக்கு உடனே பணி ஆணை வழங்க வேண்டும் என்று அந்தத் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிக ளில் காலியாக உள்ள 2800 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான, டி.ஆர்.பி. தேர்வு கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர் வில், தமிழ் பாடத்தில் தேர் ச்சி பெற்றவர்களுக்கு மட் டும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பணி ஆணை வழங்கப்பட்டது.இந்நிலையில், மற்ற பா டத்தில் தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு பணி ஆணை வழங் கப்படவில்லை என தர்ம புரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்க ளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஞா யிறன்று டி.ஆர்.பி. அலுவல கத்திற்கு வந்திருந்தனர்.
இதுகுறித்து, தரும புரியைச் சேர்ந்த முது நிலைப் பட்டதாரி ஆசிரி யர் பாபு கூறுகையில், முது நிலைப்பட்டதாரிகளுக் கான தேர்வில், தேர்ச்சி பெற்ற தமிழ் பாடத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கடந்த மூன்று மாதங்களு க்கு முன்பாக பணி ஆணை வழங்கப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர். நாங்கள் தேர்ச்சி பெற் றும் இதுவரை, இயற்பியல், வேதியியல், கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடத் தில் தேர்ச்சி பெற்றவர்களு க்கு பணி ஆணைஇதுவரை யில் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து டி.ஆர்.பியி டம் கேட்டதற்கு, 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் உள்ளது. அதன் தீர்வு வந்தபிறகுதான், அதாவது, ஜூன் அல்லது ஜூலை மாதங்களில்தான் பணி ஆணைவழங்கப்படும் என்று தெரிவித்துவிட்ட னர்.

பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பேருந்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

கல்வி வணிகம்

கல்வி வியாபாரமாகி, இப்போது பெருவணிகமாக மாறிக்கொண்டிருக்கிறது. உயர்கல்விக்கு பணத்தை கொட்ட வேண்டியிருக்கிறது. அந்த நிலை பள்ளிகளுக்கும் வந்துவிட்டது. மழலைப் பள்ளியில் சேர்க்கவே லட்சங்களில் இறைக்க வேண்டிய நிலை இருக்கிறது. பணமிருந்தால்தான் உரிய கல்வியும் இடமும் கிடைக்கும் என்கிற நிலை வருவது ஆரோக்கியமானதல்ல. பெற்றோரின் மனப்போக்கும் இச்சூழல் வளர்வதற்கு ஏதுவாக இருக்கிறது. என்ன விலை கொடுத்தாவது குறிப்பிட்ட பள்ளி, கல்லூரியில் சேர்க்க துடிக்கிறார்கள். அதை தங்களது கவுரவ சின்னமாக கருதுகிறார்கள். இந்த வேட்கையை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டு கல்லாவை நிரப்புகின்றன. நிறுவனப் பெயரை நிலைநாட்டி, வருமானத்தை பெருக்குவதற்காக மதிப்பெண் உருவாக்கும் பண்ணைகளாக பள்ளிகளை மாற்றிவிட்டனர்.
இயந்திரகதியிலான இத்தன்மை, மாணவர்களின் இயல்பான படைப்புத்திறனை நசுக்குகிறது. அவர்களின் தனித்துவ ஆற்றலை மங்கிப் போகச் செய்கிறது. இதை உணர்ந்துதான் கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்ட விதிகளின்படி, பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வாங்கக்கூடாது. நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது. அறிவுத்திறன் சோதிக்கிறோம் என்ற பெயரில் நேர்காணல் வைக்கக்கூடாது. ஆனால் இந்த விதிகள் எதையும் பள்ளிகள் சட்டை செய்வதே இல்லை.
மே மாதத்தில்தான் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவு போட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆண்டின் தொடக்கத்திலேயே விண்ணப்பங்களை வழங்கி, மாணவர் சேர்க்கையை தொடங்கி, நடத்தி முடித்தும்விட்டன.
தனியார் பள்ளிகளின் இதுபோன்ற விதிமீறல்களை இப்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் தொடங்கிவிட்டன. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று, மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வை நடத்தியிருக்கிறது. 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்கத்தான் 3 மணி நேரம் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து கல்வித் துறைக்கு தகவல் கிடைத்து, முதன்மை கல்வி அதிகாரி அப்பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பல பள்ளிகளில் பாடங்களை சரிவர எடுப்பதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. வீட்டில் படித்துக் கொள்ளுங்கள், பெற்றோரை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள் என்று மாணவர்களை அறிவுறுத்துகின்றனர்.
கிரகிக்கும் திறன் குறைவாக உள்ள மாணவனுக்கும் உரிய முறையில் பாடம் நடத்தி, அவனது உயர்வுக்கு உதவுவதுதான் ஆசிரியர்களின் கடமை. திறமை மிக்க மாணவர்களை மட்டும் நுழைவுத்தேர்வின் மூலம் பொறுக்கி எடுத்து, அவர்களுக்கு பாடம் சொல்லித் தருவதில் என்ன இருக்கிறது. பள்ளியின் தேர்ச்சி விகிதம், மதிப்பெண் பெருமையை காட்டுவதை மட்டும் இலக்காக வைத்து செயல்படுவதே இதற்கு காரணம். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே அந்த சூழலை உருவாக்க முடியும்.

ஆசிரியர் தேர்வு விவகாரம் புதிய மதிப்பெண் வழங்கும் விதிமுறை ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணையில் புதிய விதிமுறையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர்நீதிமன்றத்தில் பிரியம்வதனா உள்பட 18 பேர் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்ணுக்கு குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண் நிர்ணயிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய கணக்கிட்டு முறையை அரசு அறிமுகம் செய்து அரசாணையில் புதிய விதிமுறை வகுத்தது.
இந்த விதிமுறை சட்டவிரோதமானது. சமமில்லாதவர்களை, சமமாக்க இந்த முயற்சியை அரசு எடுத்துள்ளது. 90 முதல் 104 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத மதிப்பெண் நிர்ணயித்து சமமாக கருதுவது தவறானது. எனவே அரசின் விதிமுறையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறியிருந்தனர். இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்து, மனுதாரர் கூறிய படி, விதிமுறை சட்டவிரோதமானது. இதை ரத்து செய்கிறேன். எனவே மனுதாரர்கள் பெற்ற மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு சதவீதம் நிர்ணயிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

8ம் வகுப்பு தனித் தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மே 1ம் தேதி அன்று பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்தவர்கள், தனித் தேர்வர்களாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினால், ஆன்லைன் மூலம் மே 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை தேர்வுத்துறை அமைத்துள்ள மண்டல மையங்களுக்கு நேரில் சென்று தேர்வுத் துறை இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். ஆனால், ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் போது மாற்றுச் சான்று நகல், பதிவுத் தாள் நகல், பிறப்பு சான்று நகல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து அனுப்ப வேண்டும். ரூ.40க்கு தபால் தலை ஒட்டிய உறையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப் படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 8ம் வகுப்பு தேர்வுக்கான அனைத்து விவர மும் தேர்வுத்துறை இணைய தளத்தில் காணலாம்.

சேலம் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் மக்கள் நீதிமன்றத்தில் ஆஜராக கல்வி அதிகாரிக்கு உத்தரவு

சேலம் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதலாக வசூலிக்கப்படுவது தொடர்பாக மக்கள் நீதிமன்றம் முன் 13ம் தேதி ஆஜராகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள் ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சிவசுப்ரமணியம் சேலம் மாவட்ட இலவச சட்டப்பணிகள் குழு மற்றும் மக்கள் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், கடந்த 2001-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு சார்பில், ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள வசதிகள், ஆசிரியர்களின் திறன் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இதை தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால், சேலம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக வசூலித்து வருகிறார்கள். 
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசின் சார்பாக கட்டண நிர்ணய குழுவினர் அனுமதித்துள்ள கட்டணம் பற்றிய விவரப்பட்டியலை வெளியிட வேண்டும். ஒவ்வொரு தனியார் பள்ளியின் வாசலிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விபரத்தை பட்டியலிட்டு வைக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து நடைமுறை படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாவட்ட இலவச சட்டப்பணிக்கள் குழு தலைவரும், மக்கள் நீதிமன்ற நீதிபதியுமான மணி வரும் 13ம்தேதி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மக்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட கல்வியை தமிழில் படித்தவருக்கு வேலை வழங்கியது சரி: 6 பேரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நிர்ணயிக்கப்பட்ட கல்வியை தமிழில் படித்தவருக்கு வேலை வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை ஐகோர்ட் நீதிபதிகள் உறுதிபடுத்தினர். 6 பேரின் மேல்முறையீட்டு மனுக்களை டிஸ்மிஸ் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அகிலா உள்ளிட்ட 6 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மேல் முறையீட்டு மனு: 2013ல் ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை நடத்தியது. தேர்வில் மாரியம்மாள் என்பவர் வெற்றி பெற்றார். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அவருக்கு வேலை கிடைக்கவில்லை. எம்காம் படிப்பை மட்டும் தமிழ் வழியில் படித்ததால் தமிழ்வழி ஒதுக்கீட்டில் அவருக்கு வேலை வழங்க முடியாது என்று தெரிவித்து ள்ளனர்.
1ம் வகுப்பிலிருந்து தமிழ் வழியில் படித்தால்தான் ஒதுக்கீடு என அப்போது கூறப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பில் எங்கள் 6 பேருக்கும் பணி நியமனம் கிடைத்தது. 
இதை எதிர்த்து மாரியம்மாள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வியை மாரியம்மாள் தமிழில் படித்ததால், அவருக்கு பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனால் முதலில் வெளியிடப்பட்ட பணி நியமன உத்தரவுகளை மாற்றியமைத்து, மீண்டும் முடிவுகளை வெளியிட்டனர். இதில் முதலில் தேர்வான எங்களுக்கு பணி கிடைக்கவில்லை.
எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், வேலுமணி முன் விசாரணைக்கு வந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் தமிழில் படித்தவர், நிர்ணயிக்கப்பட்ட கல்வியை தமிழில் படித்தவர் என இவர்களில் யாருக்கு முன்னுரிமை என்பதை தீர்மானிக்க வேண்டி உள்ளது. 2010ல் கொண்டு வந்த சட்டப்படி காலி பணியிடங்களில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% முன்னு ரிமை வழங்கப்பட்டது. இந்த சட்டம் வந்த பிறகு பலர் தமிழ் வழியில் படித்துள்ளனர்.
இப்படி படித்தவர்களுக்கு வேலை வழங்குவதை மறுக்க முடியாது. எனவே தனி நீதிபதியின் உத்தரவு சரியே. மதிப்பெண் அடிப்படையில் அவருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று உத்தரவிட்டு, மேல் முறையீட்டு மனுக்களை டிஸ்மிஸ் செய்தனர்.

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு: மெட்ரிக்குலேஷன் இயக்ககம் நடவடிக்கை

கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், ஏழை எளிய குழந்தைகளை இந்த கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகள் சேர்க்க வேண்டும் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 2014-2015ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மே மாதம் நடத்த வேண்டும் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது. ஆனால் சில பள்ளிகளில் ஏற்கெனவே மாணவர் சேர்க்கை நடந்து முடிந்துவிட்டது. இத தவிர சில பள்ளிகள், மாணவர் சேர்க்கையின்போது நுழைவு தேர்வும் நடத்துகின்றனர்.
இது தொடர்பாக பல புகார்கள் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநருக்கு வந்தன. அதன் பேரில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தனியார் பள்ளிகளுக்கு கடுமையான சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி மே மாதம்தான் சேர்க்கை நடத்த வேண்டும். நுழைவுத் தேர்வுகள் நடத்தக்கூடாது என்றும் கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும் மாணவர் சேர்க்கையின்போது 25 சதவீதம் ஏழை எளிய பிரிவு குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. பள்ளி சேர்க்கைக்கான மாதிரி விண்ணப்ப படிவத்தையும் அரசு வெளியிட்டுள்ளது. இந்த படிவங்களை அரசு இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் 200 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் பெறாமல் இருந்தவர்களுக்கும் தற்போது அகவிலைப்படி 200 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு ஊதியக்குழு அமைக்கப்பட்டது. 6வது ஊதியக்குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலருக்கு உயர்த்தப்பட்ட ஊதியம், அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. ஊதியக்குழு பரிந்துரைத்தாலும், பணி இடை நீக்கம், ஒழுங்கு நடவடிக்கை, சொந்த பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதை பெற முடியவில்லை. எனவே அவர்கள் அனைவருமே 2006ம் ஆண்டுக்கு முந்தைய ஊதியம் மற்றும் அகவிலைப்படியைத்தான் பெறலாம்.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி கடந்த 3ம் தேதி அறிவிக்கப்பட்டது, 6வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தியது. 2006ம் ஆண்டுக்கு முந்தைய ஊதியம் பெறுபவர்களுக்கு, கடந்த 3ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்ட அகவிலைப்படி உயர்வை பெற முடியாத நிலையில் இருந்தனர். அவர்களின் அகவிலைப்படி 183 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்ந்து நீடித்தபடி இருந்தது.

தற்போது அவர்களுக்கும், அகவிலைப்படியை 183 சதவீதத்தில் இருந்து 200 சதவீதமாக உயர்த்தி தனியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, கடந்த ஜனவரி 1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக நிதித்துறை (செலவினம்) செயலாளர் த.உதயசந்திரன் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளார். அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் ஊதிய விகிதங்களுக்கு கீழ்வரும் அலுவலர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசு மானியம் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், எழுத்தர்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தும்.

கழிவறை இல்லாததால் மறைவிடம் தேடி சென்றார் தேர்தல் பணி முடிந்து வந்த ஆசிரியை ரயில் மோதி பலி: ரயில் நிலையங்களின் அலங்கோலம்

பெரிய ரயில்நிலையங்களில் கூட கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. தேர்தல் பணிக்கு சென்று திரும்பிய ஆசிரியை, மறைவிடம்தேடி அலைந்தபோது ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். இதற்கு பிறகாவது தெற்கு ரயில்வே விழித்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரக்கோணத்தைச் சேர்ந்த ஆசிரியை பூங்கொடி. இவர் தேர்தல் பணிக்காக வாணியம்பாடி அருகில் உள்ள கிராமத்துக்கு சென்றுள்ளார். பணிகள் முடிய தாமதமானதால் அன்று இரவு வாணியம்பாடி ரயில்நிலையத்துக்கு சக ஆசிரியைகளு டன் சென்றுள்ளார். அரக்கோணம் செல்லும் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது பூங்கொடி உள் ளிட்ட இரண்டு ஆசிரியைகள் இயற்கை உபாதை காரணமாக கழிவறையை தேடினர்.

அந்த ரயில்நிலையத்தில் கழிவறை இல்லை. வேறு வழியில்லாமல் வெளியே ரயில் பாதையை ஒட்டிய பகுதிக்கு சென்றுள்ளனர். மற்ற 2 ஆசிரியைகளும் துணைக்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் ரயில்நிலையம் திரும்பியபோது பெங்களூர் நோக்கிச் சென்ற காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி படுகாயமடைந்த பூங்கொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியை ரயில் மோதி இறந்த தகவல் அறிந்து அங்கு சென்ற மாவட்ட அதிகாரிகள் அன்றிரவே பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் பூங்கொடி உடலை ஒப்படைத்துள்ளனர். இந்த விபத்தை பார்த்த இன்னொரு ஆசிரியை அதிர்ச்சியில் படுக்கையில் கிடக்கிறார். தேர்தல் சம்பந்தப் பட்ட விவரம் என்பதால் அதிகம் வெளியில் வராமல் பார்த்துக் கொண்டனர்.
அதனால் வாணியம்பாடி ரயில்நிலையத்தின் அவலம் வெளியில் வராமல் போய்விட்டது. இத்தனைக்கும் வாணியம்பாடி ஒன்றும் வழி ரயில்நிலையம் அல்ல. தினமும் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் ரயில்நிலையம். தொழில் நகரம் என்பதால் அங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பயணிக்கின்றனர். இருந்தும் அங்கு கழிவறை கிடையாது. குடிநீர் வசதியில்லை. ரயில்வேயின் இந்த அலட்சியத்தால் ஒரு ஆசிரியை உயிர் அநியாயமாக பலியாகி விட்டது. அந்த ஆசிரியை மகளுக்கு மே 4ம்தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் இருந்தவர் தவிர்க்க முடியாமல் தேர்தல் பணிக்கு சென்றுள்ளார்.
வாணியம்பாடி மட்டுமின்றி தெற்கு ரயில்வேயின் 95 சதவீத ரயில்நிலையங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பல இடங்களில் நிழற்கூரைகள் கிடையாது. இந்த வசதிகள் இருக்கும் பெரிய ரயில்நிலையங்களிலும் பலவற்றில் இரவு நேரங்களில் கழிவறைகளை மூடி விடுகின்றனர். இதற்கு காரணம் எல்லாம் கட்டண கழிவறைகள் என்பதால் குறிப்பட்ட நேரத்திற்கு மேல் காண்டிராக்டர்கள் ஆட்களை வேலை செய்யவிடுவதில்லை. இரவில் வருவாய் குறைவாக இருக்கும் என்பதாலும், ஊழியர்களுக்கு கூடுதலாக சம்பளம் தரவேண்டியிருக்கும் என்பதால் மூடிவிடுகின்றனர். அதனை வழக்கம் போல் ரயில்வே அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
வழி ரயில்நிலையங்கள் என்று அழைக்கப்படும், பெரிய ரயில்நிலையங்களுக்கு இடையில் உள்ள சிறிய ரயில்நிலையங்களில் கழிவறைகளே இருப்பதில்லை. கழிவறைகள் இருக்கும் சென்னை புறநகர் ரயில்நிலையங்களில் அவற்றை திறப்பதில்லை. சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களுடன் கழிவறைகள் கட்டி 8 ஆண்டுகள் முடிந்த நிலையில் அந்த கழிவறை களை பூட்டியே வீணாக்கி கொண்டிருக்கின்றனர்.
இதற்காக 5 முறை தெற்கு ரயில்வே டெண்டர் விட்டும் ஒருவரும் எடுக்கவில்லை. காரணம் ரயில்வே நிர்ணயித்துள்ள கட்டணம் அதிகம் என்பதுதான். அதுமட்டுமல்ல பயன்பாட்டில் இருக்கும் கழிவறைகள் அனைத்தும் கட்டண கழிவறைகள்தான். காசை மட்டும் குறி வைத்து தெற்கு ரயில்வே செயல்படுவதால் ரயில்நிலையங்களில் கழிவறைகள் இல்லை. அதனால் பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

தயார் நிலையில் இலவச பாடப்புத்தகங்கள்: மே 15ம் தேதிக்கு பிறகு வினியோகம்

தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான இலவச புத்தகங்களை பொறுத்தவரை உயர் வகுப்புகளுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி முடிந்து, தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் வினியோகம் தொடங்கப்பட்டுள்ளது. திருவான்மியூர் கிடங்கில் இருந்து அனைத்து வட்டார அலுவலகங்களுக்கும், பாடப்புத்தகங்களை பிரித்து, லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு அந்தந்த மாவட்ட குடோன்களில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அச்சகங்களில் இருந்து நேரடியாக அனுப்பும் பணியும் தொடங்கியுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பிளஸ் 2 பாடப்புத்தகங்களை, பிளஸ் 1 ரிசல்ட் வெளியிட்ட பிறகு தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்குவார்கள்.
இதைதொடர்ந்து, 22 வட்டார அலுவலகங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆகிய இடங்களில் புத்தகங்கள் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. விற்பனைக்காக கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் சுமார் 16 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இலவச பாடநூல் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காக 64 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்நிலையில், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான முப்பருவ முறை புத்தகங்கள் மே 15ம் தேதிக்குள் அனைத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்க தமிழ்நாடு பாடநூல் கழகம் திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு தொகுதி புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு இந்த ஆண்டு முப்பருவ முறை இல்லை என்பதால் கடந்த ஆண்டு பயன்பாட்டில் இருந்த அதே புத்தகமே இந்த ஆண்டும் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன. அதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கிறது. 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு தலா ஒரு புத்தகம், 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு தலா 2 புத்தகங்கள் என அச்சிடப்பட்டுள்ளன. ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்கள் கையிலும் புதிய புத்தகங்கள் இருக்கும்.
பத்தாம் வகுப்பு பாட புத்தகங்களை, 9ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான பிறகு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குவார்கள். பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் சுமார் 75 லட்சம் அச்சிடப்படுகின்றன. பத்தாம் வகுப்பு புத்தகங்கள் வினியோகம் செய்த பிறகு படிப்படியாக மற்ற வகுப்பு புத்தகங்கள் மே மாத இறுதிக்குள் வழங்கப்படும். ஆனால் மே 15ம் தேதிக்குள் அனைத்து வகுப்பு புத்தகங்களும் வழங்கப்படும் என்று பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன