Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 29 April 2014

ஓட்டுச்சாவடிகளில் போதிய வசதியில்லாததால் அனுபவ கசப்பு!; பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் புலம்பல்


திருப்பூர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணியாற்றியதில், முறையான திட்டமிடல் இல்லாததால், பலவிதங்களிலும் பாதிக்கப்பட்டதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணியில், 10 ஆயிரத்தும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று பூத் சிலிப் வழங்கினர். தேர்தல் மையங்களில் ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலராக பணிபுரிந்தனர். தேர்தல் நடவடிக்கைகளில், முறையான திட்டமிடல் இல்லாததால், மன <உளைச்சலும், தேவையற்ற அலைச்சலும் ஏற்பட்டதாக ஆசிரியர்கள் பலரும் புலம்புகின்றனர்.திருப்பூர், பல்லடம், சூலூர், உ<டுமலை பகுதிகளில், இரண்டு, மூன்று கட்டங்களாக தேர்தல் பணி குறித்த பயிற்சி முகாம், பெயரளவுக்கே நடந்தது. அங்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்து, சரியான செயல்விளக்கம் அளிக்கவில்லை. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளே, ஆசிரியர்கள் மையத்துக்குச் சென்று விட்டனர். பல பள்ளிகளில் கழிப்பிடம், குளியலறை வசதியில்லை. ஆண் ஆசிரியர்கள், அருகில் உள்ள வீடுகளில், தொழிற்சாலைகளுக்கு சென்று குளித்து தயாராகி விட்டனர். பெண் ஆசிரியர்கள் தர்ம சங்கடத்துக்கு உள்ளாகினர். ஓட்டுப்பதிவு மாலை 6.00 மணிக்கு முடிந்தது. இருப்பினும் கூட, இரவு 9.00 மணிக்கு பிறகே பல மையங்களில் இருந்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெற்றுச் செல்லப்பட்டன. இதனால், நள்ளிரவு வரை மையங்களில் ஆசிரியர்கள் இருக்க வேண்டிய அவதி ஏற்பட்டது. திரும்பிச் செல்ல வாகன வசதி செய்யப்படாததால், பணி முடிந்தும் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பணியாற்றும் பகுதியில் இருந்து, 20 முதல் 30 கிலோ மீட்டர் சுற்றளவில், தேர்தல் பணி ஒதுக்கலாம். ஆனால், வெகுதொலைவில் உள்ள மையங்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் உத்தரவை பின்பற்றியே, ஆசிரியர்கள் தேர்தல் பணி செய்கின்றனர். முறைகேடு செய்ய வாய்ப்பு இல்லை. அந்தந்த பகுதிகளிலேயே, தேர்தல் பணி ஒதுக்க மறுப்பதால், ஆசிரியர்கள் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. புதிய ஊர்களில், தங்குமிட வசதியின்றி, குளிக்க இடமின்றி, பெண் ஆசிரியர்கள் மன உளைச்சல் அடைந்தனர். கிராமப்புறங்களில், தேர்தல் பணியாற்றியவர்களுக்கு உணவு வசதி செய்யவில்லை. தேர்தல் பணி துவங்கியதில் இருந்து, தேர்தல் மண்டல அதிகாரிகள், ஆசிரியர்களிடம் கடுமையாக நடந்து கொண்டனர். தேர்தல் பணிக்கான சம்பளம் ஒரு தரப்பு ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ளது; மற்றவர்களுக்கு இன்னும், வழங்கப்படவில்லை. இதுபோன்ற பல குளறுபடிகளால், தேர்தல் பணி பல ஆசிரியர்களுக்கு கசப்பான அனுபவமாக இருந்தது, என்றனர்.

No comments:

Post a Comment