Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 30 April 2014

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் ஜூன் 2-ந்தேதி திறப்பு


தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்துக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) மே 1-ந் தேதி முதல் விடுமுறை விடப்பட உள்ளது. 

விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் ஜூன் மாதம் 2-ந் தேதி திறக்கப்படுகின்றன. அப்போது 1-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை (11-வது வகுப்பு தவிர) அனைத்து வகுப்புகளும் அன்றைய தினம் தொடங்கப்பட உள்ளன. 

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே 23-ந் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தேர்வு முடிவு வந்த அன்றே மதிப்பெண்ணை இணையதளத்தில் ஜெராக்ஸ் எடுத்து விடலாம். அதைக்கொண்டு பிளஸ்-1 சேரும் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். 

மாணவர் சேர்க்கை முடிந்து ஜூன் மாதம் 16-ந் தேதி பிளஸ்-1 வகுப்புகள் தொடங்குகின்றன. சில பள்ளிகளில் ஜூன் மாதம் முழுவதும் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடந்து கொண்டே இருக்கும். கோடை விடுமுறைக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கும் அன்றே அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் 2 செட் சீருடைகளும் வழங்கப்பட உள்ளது. 

தமிழ்நாடு பாடநூல் கழகம் ஏற்கனவே 60 சதவீத பாடப்புத்தகங்களையும், நோட்டு புத்தகங்களையும் அச்சடித்து தமிழ்நாடு முழுவதும் அனுப்பிவைத்துள்ளது. 1-வது முதல் 5-வது வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள் அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அதுபோல 6-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளனர். 100 சதவீத புத்தகங்களும் அதாவது மொத்தம் 7 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மே மாதம் 15-ந்தேதிக்குள் தயாராகி மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட உள்ளது. 

பள்ளிக்கூடங்கள் திறக்கும் அன்று அனைத்து பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும். அனைத்து விலை இல்லா பொருட்களும் பள்ளிக்கூடம் திறந்து 6 மாதங்களுக்குள் வழங்கப்பட உள்ளது என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment