Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday 27 April 2014

தேர்தல் ஆணையம் கடும் உத்தரவு : தமிழகத்தில் ஆய்வு கூட்டம் நடத்த அமைச்சர்களுக்கு தடை


தேர்தல் பணிகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதால் அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்கள் நடத்தக் கூடாது, அதிகாரிகளை மாற்றக் கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்கும் கடந்த 24ம் தேதி தேர்தல் நடந்தது. முன்னதாக மார்ச் 5ம் தேதி நாடு முழுவதும் தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அப்போது புதிய அறிவிப்புகள், இலவசங்கள் வழங்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் முதலமைச்சர், அமைச்சர்கள் அரசு கார்களை பயன்படுத்தக் கூடாது. அலுவல கங்களை பயன்படுத்தக் கூடாது, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தக் கூடாது, அதிகாரிகளை மாற்றக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதோடு அமைச்சர்கள், மேயர்கள், எம்எல்ஏக்களின் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

அதன்பின் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து டிஜிபி ராமானுஜம், தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதில் புதிய தேர்தல் பிரிவு டிஜிபியாக அனூப் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டார். சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றப்பட்டு திரிபாதி நியமிக்கப்பட் டார். அதோடு நாமக்கல் எஸ்பி செந்தில்குமார் மாற்றப்பட்டார். அவருடன் சேலம், வேலூர், ஈரோடு மாவட்ட கலெக்டர்களும் மாற்றம் செய்யப்பட்டனர். இந்த பரபரப்புடன், தமிழகத்தில் கடந்த 24ம் தேதி தேர்தல் முடிந்தது.
1967ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 46 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் அதிக பட்சமாக இந்த தேர்தலில்தான் 73.67 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. 1967ம் ஆண்டு 76 சதவீதம் பதிவாகியது. அதன்பின் அதிகபட்சமாக கடந்த ஆண்டு 72.46 சதவீதம் பதிவாகியிருந்தது. இப்போது கடந்த ஆண்டை விட அதிகமாக 1.21 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், முதல் வர் ஜெயலலிதா, தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் தலைமைச் செயலகம் வந்தார். அமைச்சர்கள் தங்களது சொந்த ஊர்களில் இருப்பதால் சென்னைக்கு இன்னும் வரவில்லை. தலைமைச் செயலகமும் வரவில்லை. இந்தநிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. அரசின் நிர்வாக ரீதியான பணிகள், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாம். மறு தேர்தல் நடைபெறுவதாக இருக்கும்பட்சத்தில் அந்த மாவட்டங்களில் இந்த பணிகளை மேற்கொள்ளக்கூடாது. 

இருந்தபோதிலும், தேர்தல் பணிகள் இன்னும் முழுவதும் முடியவில்லை என்பதால் தேர்தலையொட்டி பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளை மீண்டும் பணியிட மாற்றம் செய்யக்கூடாது. தேர்தல் பணிகள் முழுவதும் நிறைவு பெறும்வரை அரசு சார்பில் நடைபெறும் ஆய்வு கூட்டங்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பங்கேற்கும் அரசியல் நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடாது. இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களுக்கு வந்தாலும், தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தக் கூடாது என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment