Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 30 April 2014

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு: முரண்பாடுகளைக் களைய கோரிக்கை.

"மேல்நிலைப்பள்ளி ஹெச்.எம்.,களுக்கு பதவியுயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும்" என, தஞ்சையில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டம்தஞ்சை மேம்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், மாவட்ட துணைத்தலைவர்கிருஷ்ணன் தலைமை வகித்தார். 
மாவட்ட செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ரமேஷ், மாவட்ட அமைப்பு சாரா செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்து பேசினர்.இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு பதவி உயர்வில்உள்ள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள முன்னாள் இயக்குனர் கருணாகரன் தலைமையிலான சீராய்வு குழு அறிக்கையை விரைந்து பெற்று உரிய தீர்வுகளை வழங்க வேண்டும். பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்வு விடைத்தாள் முகப்பு சீட்டுதைப்பதற்கு தாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வழங்க வேண்டும்.ஓய்வு பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய பணப்பலன்களை 2013-14ம் கல்வியாண்டில் காலதாமதமின்றி பெற்று வழங்க சி.இ.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளஸ் 2 செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வுக்கு உரிய சில்லரை செலவினத்தொகையை இதுவரை வழங்காமல், சி.இ.ஓ. காலம் தாழ்த்தி வருவது கண்டனத்துக்குரியது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாதாமாதம் ஊதியம் பெற்றுத்தருவதில் வேண்டும் என்றே காலதாமதம் செய்யும் கல்வி மாவட்ட அலுவலர் போக்கை கண்டிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் அறிக்கையை தலைமையாசிரியருக்கு கூறாமல், வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என, இமெயில் மூலம் புகார் அனுப்பியும், மாணவர்கள் பெயர் பட்டியல், அனுமதித்த தொகை பட்டியல் தராமல் குழப்பமான நிலையை ஆதிதிராவிடர் நல அலுவலக அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இதற்குரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என, தஞ்சை கலெக்டரை வலியுறுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment