கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய மனித வளம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதையடுத்து 2010ம் ஆண்டு முதல் பெரும்பாலான மாநிலங்கள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், வரும் 10ம் தேதி கல்வி தொடர்பான மத்திய ஆலோசனை குழுவின் கூட்டம் டெல்லியில் நடக்க உள்ளது. அதில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அனைத்து மாநி
லங்களிலும் செயல்படுத்தப்படுகிறதா, அதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்ய இருக்கின்றனர். இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் சர்வே நடத்தப்பட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள 36575 அரசு பள்ளிகளிலும், குஜராத்தில் 33476 பள்ளிகளிலும், கோவாவில் 1034 பள்ளிகளிலும், ஹரியானாவில் 14785 பள்ளிகளிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது.
இதன்படி தமிழகத்தில் 100 சதவீத பள்ளிகளில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதாக அந்த சர்வே கூறுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும் கல்வி அறிக்கையில்(அசர்) பள்ளிகளில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளின் உண்மை நிலை பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கும், மத்திய மனித வளம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் ஆய்வு அறிக்கைக்கும் வித்தியாசம் தெரியும்.
தமிழகத்தில் பல பள்ளிகளில் போதிய கழிப்பிட வசதிகள் இல்லை என்பது உண்மை என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு வலுசேர்க்கும் விதமாக, லிட்டில்ஸ் குழந்தைகள் மையம், சமகல்வி இயக்கம், கிரை ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து தமிழகத்தில் 25 மாவட்டங்களில் ஆய்வு செய்து நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது. அதில் பள்ளிகளின் நிலை குறித்தும் தகவல்கள் வெளியிட்டுள் ளனர்.
அதன்படி 40.5 சதவீத குழந்தைகளுக்கு பள்ளியில் கழிப்பறை வசதி இல்லை. 20.48 சதவீதம் குடிநீர் வசதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய மனித வளம், மேம்பாட்டுத்துறை சர்வேயில் கூறப்பட்டுள்ள தகவல் கல்வியாளர்களை அதிர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment