Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 24 October 2013

பொறியியல் ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த ஆன்லைன் படிப்புகள்!

தமிழகத்தில் பொறியியல் கல்வியை மேம்படுத்த, ஆசிரியர்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில் பலவிதமான ஆன்லைன் படிப்புகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் 535 பொறியியல் கல்லூரிகளில், மொத்தம் 50,000 ஆசிரியர்களும், 6 லட்சம் மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால், பொறியியல் கல்வியின் தரம்தான் பரிதாபமாக உள்ளது. தரமான ஆசிரியர்கள் இல்லை. இதனால் தரமான மாணவர்கள் உருவாவதில்லை.பொறியியல் ஆசிரியர்களும், மாணவர்களும், ஐ.ஐ.டி.,களின் NPTEL மற்றும் MIT freeware மற்றும் Coursera ஆகியவற்றில் படித்து தங்களின் அறிவை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.கடந்த சில வருடங்களாக, மாநிலத்தில் பொறியியல் கல்லூரிகள் பல்கிப் பெருகின. ஆசிரியர்கள் நியமனத்தில் என்னதான் AICTE விதிமுறைகள், வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் கூறினாலும், அது பொறியியல் கல்லூரிகளால் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை."பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் அறிவுத்தர குறைபாடுகளை நீக்க தமிழக அரசு விரும்புகிறது. எனவே, நல்ல ஆன்லைன் படிப்புகளை(MOOC - Massive Open Online Courses) மேற்கொண்டு, அதன்மூலமாக, அறிவைப் பெருக்கி, மாணவர்களுக்கு சரியான கல்வியை வழங்க, அரசு வலியுறுத்துகிறது" என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரக கமிஷனர் குமார் ஜெயந்த் கூறினார்.தமிழக அரசு எடுத்துள்ள ஆன்லைன் படிப்புகள்(MOOC) தொடர்பான முடிவு சர்வதேச சூழலுக்கு ஏற்றபடி மேற்கொள்ளப்பட்டதாகும். பொறியியல் ஆசிரியர்களின் தரநிலைக் குறைபாட்டைப் போக்க, ஆன்லைன் படிப்புகளே சிறந்த வழியாகும்."இந்த முயற்சி, அறிவுத் தேடலுக்கான ஒரு உந்துதலை வழங்கும் அதே நேரத்தில், முதுநிலை பொறியியல் படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பை முடித்து, ஆசிரியர்களாக பணியில் சேரும் வகையில் போதுமான எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகளை, கல்லூரிகள் உருவாக்குவதை உறுதிசெய்யும் வகையில் முயற்சிகள் மேற்க¦ள்ளப்பட வேண்டும்" என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment