Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday 28 November 2013

அரசு பள்ளிகளில் 10-வது, பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்காக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளிக்கூடங்கள்
தமிழ்நாட்டில் 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும், 5ஆயிரத்து 500 உயர்நிலைப்பள்ளிகளும் 5 ஆயிரத்து 800 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. மொத்தத்தில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் 7 லட்சம் பிளஸ்-2 மாணவர்களும், 8 லட்சம் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களும் படிக்கிறார்கள்.
இவர்களில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளை அரசு இறுதித்தேர்வில் தேர்ச்சி அடையச்செய்வதற்கான தேர்ச்சி பெறுவது கடினம் என்ற நிலையில் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தனியாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்காக அந்த மாணவர்கள் எளிதில் படிக்க வினா-விடை பயிற்சி ஏடு ஒன்று அந்தந்த மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:-
ஆசிரியர்களுக்கு பயிற்சி
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகளை கண்டறிந்து அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மீது தனி அக்கறை செலுத்தி தேர்ச்சி பெற வைக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி அந்தந்த மாவட்டங்களில் அளிக்கப்பட்டு வருகிறது. வருகிற அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்ணை கொண்டு எந்த பாடத்தில் குறைவாக எடுத்திருக்கிறாரோ அந்த பாட ஆசிரியர் குறிப்பிட்ட அந்த மாணவர்களுக்கு தனியாக பாடம் நடத்த வேண்டும்.
அந்த மாணவர் தேர்வில் என்ன பிழை செய்து இருக்கிறாரோ அதை திருத்த வேண்டும்.மேலும் எதைப் படித்தால் எளிதில் தேர்ச்சி பெறலாம் என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எளிதில் சொல்லிக்கொடுக்கிறார்கள். இதனால் தேர்ச்சி சதவீதம் கண்டிப்பாக உயரும். இவ்வாறு ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment