Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Friday 29 November 2013

தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும் துணைவேந்தர் சந்திர காந்தா பேட்டி

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும் என்று துணைவேந்தர் சந்திரகாந்தா தெரிவித்தார்.

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரகாந்தா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
5 லட்சம் பேர் பட்டம் பெற்றுள்ளனர்
கல்லூரிகளுக்கு செல்ல முடியாதவர்களும் தபால் வழியில் படிப்பதற்கு ஏற்ற வகையில் தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகம் விளங்குகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பட்டம் பெற்றுச்சென்று உள்ளனர்.
தற்போது 110 பாடப்பிரிவுகளுடன் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகம் பி.எட். படிப்பில் தமிழ் வழியில் 500 மாணவர்களையும், ஆங்கில வழியில் 500 மாணவர்களையும், மனநலம் குன்றிய மாணவர்கள், காதுகேட்காதவர்கள், கண்பார்வையற்றவர்கள் ஆகிய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கக்கூடிய வகையில் 500 பேர்களுக்கு பி.எட்.படிப்பும் கற்பிக்கப்படுகிறது.
இந்த வருடம் இந்த 3 பி.எட். படிப்புகளுக்கும் தேர்வு நடத்தி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎச்.டி., எம்.பில். படிப்புகள்
இதுவரை தபால் வழியில் நடந்த எம்.பில். மற்றும் பிஎச்.டி. படிப்புகள் நேரடியாகவும் இந்த ஆண்டுமுதல் நடத்தப்படுகிறது. பிஎச்.டி. படிப்பில் 106 பேர்களும், எம்.பில். படிப்பில் 98 பேர்களும் சேர்க்கப்படுகிறார்கள். இந்த ஆராய்ச்சி படிப்புகள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துறைகளில் நடக்கின்றன.
பாடத்திட்டம் மாற்றம்
கடந்த 2006-ம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இப்போதைய தேவைக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதாவது ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
இப்போதைய மாணவர்களில் சிலர் இன்றைய காலக்கட்ட அவசர உலகிற்கு ஏற்ப இருக்கிறார்கள். அவர்களின் மனநிலையை மாற்றவேண்டும் என்று எண்ணி 6 உளவியல் பாடங்களிலும் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. 110 பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும்.
செல்போனில் பாடம் படிக்கலாம்
செல்போனில் பாடம் படிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவருகிறது. முதல்கட்டமாக எம்.ஏ. தமிழ் பாடத்திட்டம் மட்டும் செல்போனில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஒரு ரகசிய கோடு கொடுப்போம். அந்த கோடு கொண்டு பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்து வைத்துக்கொண்டு எங்கு போனாலும் செல்போனில் படிக்கலாம்.
இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும். பின்னர் மற்ற படிப்புகளிலும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பாடத்திட்டம் சி.டி. வடிவிலும் வழங்கப்பட்டு வருகிறது.
மொத்தத்தில் எல்லோரும் கல்வி கற்கவேண்டும் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது.
இவ்வாறு துணைவேந்தர் சந்திரகாந்தா தெரிவித்தார்.

No comments:

Post a Comment