திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை தொடங்கி ஏப். 18ஆம் தேதி வரை வாக்காளர் சீட்டு வழங்கும் பணி நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி அறிவித்துள்ளார்.
மேலும், ஏப். 19,20 ஆகிய இரு நாள்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி வாக்காளர் சீட்டுகள் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வாக்காளர் சீட்டு ஏப். 12 முதல் 18ஆம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாகச் சென்று வழங்கப்படும். இந்தப் பணிகளை மாநகராட்சி அலுவலர்கள் மேற்பார்வையிடுவார்கள். இந்தச் சீட்டை விநியோகம் செய்யும்போது வாக்குச்சாவடி முகவர்களோ அல்லது வேட்பாளர்களோ உடன் செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
எந்தந்தத் தேதிகளில் எந்தந்தத் தெருக்களில் விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகள் மற்றும் கோட்ட அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ மூலம் விளம்பரமும் செய்யப்படும்.
மேலும், ஏப். 19, 20 ஆகிய இரு நாள்களில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சீட்டு விநியோகிக்க சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். வாக்காளர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் பொறுப்பான ஒருவர் இவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வாக்காளர் சீட்டைப் பெற முடியாதவர்கள் தேர்தல் நாளன்று (ஏப். 24) அந்தந்த வாக்குச்சாவடிகளில் மாநகராட்சியால் பிரத்யேகமாக அமைக்கப்படும் இடத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment